Scripture வேதவசனம்: மத்தேயு 14:22 இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
24. அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
23. அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
24. அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
Observation கவனித்தல்: அவர்கள் அப்போதுதான் ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தனர். அதன் பின்னர் இயேசு தன் சீடர்களை அவருக்கு முன்னதாகச் செல்லும்படி படகில் அனுப்பினார். அவர்கள் ஒரு புயலுக்குள்ளே அனுப்பப்பட்டதை அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆயினும் அந்த புயலின் நடுவில் தான் இயேசு கடலில் நடந்து வந்தார். அந்த புயலில்தான் பேதுரு கடலில் நடக்கும்படி அழைக்கப்பட்டார். அந்த புயல் அமர்த்தப்பட்டப் பின்னரே அவர்கள், ”மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று ” சொன்னார்கள்.
Application பயன்பாடு: ஒரு புயலினூடாக நான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட முறை தேவனுடைய சித்தத்தைப் பின்பற்றி இருக்கிறேன். அந்த்அப் புயலின் நடுவே அவர் என்னுடன் இருந்ததையும் நான் கண்டேன், அவர் கிரியை செய்ததையும், அவர் மட்டுமே செய்யக் கூடியவைகளை அவர் செய்ததைய்உம் கண்டேன். மறுகரை சேர அவர் உதவினதையும் நான் கண்டிருக்கிறேன்.இப்படிப் பட்ட சமயங்களில், மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லியும் இருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்காக வாழ்வது என்பது புயல்கள் இல்லாத வாழ்க்கை அல்ல. அப்படிப் பட்ட புயல்களின் நடுவேதான் நாம் புயலை அடக்குபவரைக் கண்டு கொள்கிறோம்.
நீர் என்னை புயலின் நடுவே அனுப்புவீர் ஆனால்,நீர் என்னை மறுகரை சேர்ப்பீர் என்று நான் உம்மை நம்பி இருக்க முடியும்.
No comments:
Post a Comment