Scripture வேதவசனம்: சங்கீதம் 139:13 நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்
14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்
Observation கவனித்தல்:
கருவில் இருக்கிற குழந்தை வெறும் திசுவே என மக்கள் வாதாடின ஒரு காலம் இருந்தது. அது கருவில் உருவான பொருள் ஆக கருதப்பட்டது. இன்று கருவில் குழந்தையின் தனித்தன்மை வாய்ந்த சரீரம் உருவாவதை காண்பிக்கும் வீடிஅயோக்கள் உண்டு. கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பதைத் தடுக்கும் சட்டங்கள் வருவது எவ்வளவு வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.
Application பயன்பாடு:
நான் எவ்வளவு அதிசயமாக உருவாக்கப்பட்டேன் என்பதைச் சிந்திக்கும்போது, தேவன் என்னை தம் நோக்கத்தை நிறைவேற்ற உருவாக்கி இருக்கிறார் எனும் உண்மையை நான் ஏற்றுக் கொள்ள உந்தப்படுகிறேன். நான் அவருக்கு விலை மதிப்பற்றவன். ஒவ்வொரு நாளும் அவருக்கு கனமும் மகிமையும் உண்டாகும்படி நான் வாழ்வது எனக்கு முன் இருக்கும் சவால். இந்த உண்மைகள் என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கும் கூட பொருந்தும். அவர்களும் ஆச்சரியமான விதத்தில் உருவாக்கப்பட்டவர்களே. அவர்களும் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருப்பதால், நான் அவர்களை மதிக்க வேண்டும்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, இந்த உண்மையைத் தொடர்ந்து எனக்கு நினைவுபடுத்தும். என் சரீரம் நீர் வாழ்கிற ஆலயம் என்பதையும் எனக்கு நினைவூட்டும்.
என் மூலமாக உம்மை மற்றவர்கள் காண நான் விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment