No One Escapes
பயன்பாடு: பரிசுத்த தன்மையுள்ள தேவனாகிய நியாதிபதி பாவத்துக்கான தண்டனையை வைத்திருக்கிறார். ஆயினும் பரம தகப்பனாகிய தேவனுடய அன்புள்ள தன்மை அவரை நம்புபவர்கள் தப்பிக் கொள்ள ஒரு வழியை உண்டாக்கியது.
ஜெபம்: பரலோக தகப்பனே, நன்றி, நன்றி, நன்றி. உம்முடைய அன்புக்காக நன்றி. உம் பரலோகத்தில் உம்முடன் நான் பங்கு பெற ஒரு வழியை உம்முடைய அநாதி ஞானத்தினால் உண்டாக்கி வைத்திருக்கிற படியால் உமக்கு நன்றி. எனக்காக மரித்து உயிர்த்தெழுந்த உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி. உம் பரிபூரண பரிசுத்தத்தையும், உம சொல்ல முடியாத அன்பையும், உம் மக பெரிய ஞானத்தையும் நான் புரிந்து கொள்ள எனக்கு உதவுகிற உம் பரிசுத்த ஆவியானாருக்காக நன்றி. ஆமென்.
வேதவசனம் Scripture: ஏசாயா 24: 1. இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
2. அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும்,
வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ
அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும்,
கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும்,
வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும்,
எல்லாருக்கும் சரியாக நடக்கும்... 17. தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும்.
18. அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில்
விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர
இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும்,
19. தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும்.
20. வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப்
பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது
விழுந்துபோம், இனி எழுந்திராது.
கவனித்தல்: ஜனங்களை பல்வேறு குழுக்களாக பிரிக்கும் பல விசயங்கள் உள்ளன. பாலினம், தேசம், நிறம், மொழி, செல்வம், கல்வி... சிலர் பெரிய கதவுளையுடைய வீட்டில் வசிக்கின்றனர். சிலர் தெருவோரங்களில் வசிக்கின்றனர். பல வித்தியாசங்கள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்த பூமியில் தான் வாழ்கிறோம். இந்த பூமிக்கு ஏதேனும் நடந்தால் அது நம் வாழ்வையும் பாதிக்கிறது. எரிமலை வெடிப்பு , பூமியதிர்ச்சிகள், சுனாமிகள், சூறாவளிகள், சுழல்காற்றுகள் - எவரும் தப்ப முடியாது. இய்ற்கைப் பேரிடர்கள் எதுவும் தான் எந்த குழுவைச் சேர்ந்தவை என்று பார்த்து வருவதில்லை. எபிரேயர் 9:27 சொல்வது போல, அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே..” ஒருவரும் தப்ப முடியாது.
ஜெபம்: பரலோக தகப்பனே, நன்றி, நன்றி, நன்றி. உம்முடைய அன்புக்காக நன்றி. உம் பரலோகத்தில் உம்முடன் நான் பங்கு பெற ஒரு வழியை உம்முடைய அநாதி ஞானத்தினால் உண்டாக்கி வைத்திருக்கிற படியால் உமக்கு நன்றி. எனக்காக மரித்து உயிர்த்தெழுந்த உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி. உம் பரிபூரண பரிசுத்தத்தையும், உம சொல்ல முடியாத அன்பையும், உம் மக பெரிய ஞானத்தையும் நான் புரிந்து கொள்ள எனக்கு உதவுகிற உம் பரிசுத்த ஆவியானாருக்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment