வேதவசனம் Scripture: சகரியா 8:2 2. நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3. நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்... 16. நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே
உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும்
ஏற்க நியாயந்தீருங்கள்.
17. ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17. ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Observation கவனித்தல்: இந்த அதிகாரத்தில் இஸ்ரவேல் மீது தேவன் வைத்திருக்கும் அதீத அன்பை நாம் காண்கிறொம். ஒருவர் மிகவும் தீவிரமாக அன்பு செய்யும்போது, தாங்கள் நேசிக்கும் ஒன்றுக்கு ஆபத்தை உண்டாக்கும் பொருளின் மீது வெறுப்பு உண்டாவது இயல்பானது ஆகும். இந்த அதிகாரமும் தேவன் வெறுக்கிற காரியங்களைக் கூறுகிறது.
பயன்பாடு Application: நான் தேவனை தீவிரமாக நேசித்தால், நான் பாவத்தை தீவிரமாக வெறுக்கும் நிலைக்கு வருவேன். இயேசுவுக்கு சிலுவையில் அதிக வேதனையைக் கொடுத்ததை நான் மிகவும் வெறுப்பேன். நான் உடனே மனம் திரும்புவதை விரும்புவேன். என் வாழ்க்கையில் பாவம் நுழைவதை நான் விரும்ப மாட்டேன்.

ஜெபம் Prayer: என் பாவங்களுக்கான விலையைச் செலுத்துமளவுக்கு நீர் என்னை நேசிப்பதற்காக நன்றி. இயேசு எனக்காக செய்ததை நான் நினைவு கூறவும், அதை கனப்படுத்துகிற ஒரு வாழ்க்கையை வாழவும் எனக்கு பரிசுத்த் ஆவியானவரே உதவும். ஆமென்.
No comments:
Post a Comment