வேதவசனம்: ஏசாயா 28:24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? 25. அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? 26. அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார். 27. உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். 28. அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 29. இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
கவனித்தல்: தேவன் தம் ஞானத்தினால் வித்தியாசமான விதைகளை உண்டாக்கி, விவசாயம் செய்பவர்கள் அதை வெற்றிகரமான அறுவடை செய்ய தம் ஞானத்தில் அவர்க்ளுக்கு கற்றுக் கொடுக்கிறார். வித்தியாசமான உழவு முறைகளைப் பயன்படுத்துவது வெற்றிகரமான அறுவடைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
பயன்பாடு : விவசாயிகளுக்கு வித்தியாசமான விவசாய முறைகளுக்கான ஞானத்தை அருளுகிற தேவன் மனிதர்களின் இதயங்களை அறிகிற ஞானத்தையும் நமக்கு தர முடியும். ஒரு இடத்தில் உள்ளவர்களைச் சந்திக்க பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான நடைமுறையை அறிந்து கொள்வது எல்லா நேரங்களிலும் மற்ற இடங்களில் வெற்றிகரமானதாக இருப்பதில்லை. அறுவடையின் ஆண்டவருடன் நாம் நேரம் செலவழித்து அவருடைய ஞானமான ஆலோசனைக்காக காத்திருக்க வேண்டும். “அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.” ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமானது வேறொரு இடத்தில் பயனற்றதாக இருக்கக் கூடும்.
முதியவர்களுக்கு ஊழியம் செய்வது என்பது இளைஞர்களுக்கு செய்யும் ஊழியத்தில் இருந்து அதிக வித்தியாசமானது என கர்த்தர் எனக்கு போதிக்கிறார். நம் குடும்பங்களில் உள்ளவர்கள் மற்றும் அவர் நம்மிடம் அனுப்புகிறவர்களின் இருதயங்களுக்கான திறவுகோல் என்ன என்பதை நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.
ஜெபம் : பரிசுத்த ஆவியானவரே, நீர் “ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.” இதை வாசிக்கிறவர்கள் மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்கான திறவு கோலைக் கண்டடைய உதவும். ஆமென்.

No comments:
Post a Comment