Sunday, January 3, 2021

உங்களுடன் இருக்கும் ஒருவர்

  வாசிக்க: ஆதியாகமம் 5,6; சங்கீதம் 3; மத்தேயு 2:1-15

வேதவசனம்: சங்கீதம் 3: 6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

கவனித்தல்: தாவீது அனேக யுத்தங்களில் வெற்றி பெற்ற நன்கறியப்பட்ட ஒரு போர்வீரன். ஒரு தைரியமான, வலிமையான ஒருவர் இது போல உறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்துவது இயல்பு என சிலர் நினைக்கலாம். ஆனால், தாவீது தனக்கு விரோதமக எழும்பின தன் சொந்த மகனிடம் இருந்து தப்பியோட வேண்டிய வருந்தக்க நிலையில் இருந்தார் என வேதம் சொல்கிறது. தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பித்து செல்வதை தவிர வேறு வழி எதுவும் இல்லாத நிலையில் தாவீது இருந்தார் என 2 சாமுவேல் 15:14 கூறுகிறது. அவருடைய நெருங்கிய உறவுகள் கூட அவருக்கு எதிராக திரும்பின சிறுமைப் படுத்தப் பட்ட ஒரு நிலையில் தாவீது இருந்தார். ஆயினும் தன்னுடைய எதிரிகளின் எண்ணிக்கையைக் குறித்தோ அவர்களது கேலியான நிந்தனைகளை குறித்தோ தாவீது கவலைப்படவில்லை. ஏனெனில் எந்த நிலையிலும் தன்னை தாங்கி நடத்துகின்ற சர்வ வல்லமையுள்ள தேவனை தாவீது அறிந்திருந்தார். அவர் தன் ராஜ்யத்தை இழந்தார், குடும்பத்தினரிடம் இருந்து பிரிய நேர்ந்தது, மற்றும் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டிய நிலை இருந்தது. கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தாவீது தன் இருதய சமாதானத்தையும், தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார் (வ.5,6). ஏனெனில், தேவன் தன்னுடன் எப்பொழுதும் இருக்கிறார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார்.

பயன்பாடு: தாவீதைப் போல, நானும் இது போன்ற சூழ்நிலைகளை சில சமயங்களில் எதிர்கொள்ள நேரிடலாம். சில நேரங்களில், என் சூழ்நிலை அல்லது நான் இருக்கக் கூடிய இடங்கள், என்னைச் சுற்றி இருப்பவர்கள் எனக்கு எதிராக எழும்பும் நிலை வரலாம். எப்பக்கத்திலும் எதிர்ப்புகளை சந்திக்கக் கூடிய ஒரு நிலை உண்டாகலாம்.  ஆயினும், அவை நான் தேவனைப் பற்றி பாடுவதையோ, தேவ சமாதானத்தை என் இருதயத்தில் பெற்று அனுபவிப்பதையோ தடுத்து நிறுத்திட முடியாது. ஏனெனில், மனிதர்கள் நிறம் மாறலாம், ஆனால், என் அன்பின் ஆண்டவர் எப்பொழுதும் என்னுடனே இருக்கிறார். ”தேவன் ஒருவருடன் இருக்கையில் அவர் இருக்கும் பக்கமே பெரும்பான்மை” (யாரோ).

ஜெபம்: பிதாவே, நான் தனிமையை உணரும் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும் நீர் என்னுடன் இருப்பதற்காக நன்றி.  உன் அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக நன்றி. உம்மைப் பற்றிய என் நம்பிக்கையையுமென் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் உறுதியாகவும் தைரியமாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்.


No comments:

Post a Comment