ஜனவரி 01, 2021: ஆதியாகமம் 1-2; லூக்கா 1
வேதவசனம்:ஆதியாகமம் 1:1-3 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
கவனித்தல்: மேலே உள்ள வசனங்களை வாசிக்கும் போது ஒரு புதிய வெளிப்பாடு எனக்கு கிடைத்தது. இந்த வசனங்களை நான் படிக்கும் போது, தேவனை ஒரு சிருஷ்டிகராகவும், மற்றும் தேவன் ஒரு பேசுபவராகவும் இருக்கிறார் என நான் நினைப்பேன். இந்த முறை எனக்கு புதிதாக சில விசயங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன். சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களின் வெளிச்சத்தினால் நிறைந்திருந்த வானம் உருவாகுவதற்க்கு முன்னே இருந்த மகா பெரிய இருளினால் தேவ ஆவியானவர் உலாவி கொண்டிருப்பதை தடுக்க முடியவில்லை. தேவ ஆவியானவர் இருளில் உலாவிக் கொண்டிருந்தார்!
பரிசுத்த ஆவியானவர் இப்பொழுதும் காரிருளில் மத்தியிலும் உலாவுகிறார். இருள் அவரை தடுத்து நிறுத்த முடியாது. நண்பகல் வெளிச்சத்தில் பார்ப்பது போல இருளிலும் அவரால் சரியாக பார்க்க முடியும். ஆவியானவரால் நடத்தப்படுபவர்கள் இருளைக் கண்டு பயப்பட தேவையில்லை.
பயன்பாடு: எதிர்காலத்தைப் பற்றிய அனேக விஷயங்கள் இருளில் உள்ளது, ஆனால் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவ ஆவியானவர் ஏற்கனவே காரிருளில் இருந்து உலாவிக்கொண்டு இருக்கிறார். பில் கெய்தரின் வார்த்தைகளில் சொல்வதானால், “ நான் விசுவாசிக்கிறேன், என்னுடைய அவிசுவாசம் நீங்க எனக்கு உதவும். நான் அறிந்திராத (காரிருள்) பாதையில் உம்மை நம்பி நான் நடக்கிறேன்.”
நம் தேசத்தில், நம் உலகில், மற்றும் என் சூழ்நிலைகளில் காணப்படுகிற இருளானது பரிசுத்த ஆவியின் பிரசன்னத்திற்கும் மற்றும் அவருடைய கிரியைகளுக்கும் தடையாக இருக்க முடியாது !!!
தேவ ஆவியானவர் அங்கே இருந்தார் என்றாலும், சிருஷ்டிப்பின் வேலையானது தேவனால் சொல்லப்பட்ட வார்த்தை வெளிப்படும் வரைக்கும் ஆரம்பிக்க வில்லை. நான் சொல்கிற வார்த்தைகளினால், தேவனுடைய ஆவியானவர் அசைவதில்லை, மாறாக, நான் தேவனுடைய வார்த்தைகளைப் பேசும்போது அவர் செயல்படுகிறார். எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையை நான் எந்தளவுக்கு அதிகமாக அறிந்திருக்கிறேனோ, அந்தளவுக்கு நான் ஜீவனுள்ள தேவ வார்த்தையாகிய இயேசுவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்வேன். அதன்பின் அதிக அதிகமாக தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஒத்ததாக என் வார்த்தைகளும் தொடர்ந்து இருக்கும்.
ஜெபம்: இயேசுவே, நீர் உமது தந்தையின் வார்த்தையை பேசினீர், நான் நீர் சொன்ன வார்த்தைகளை - சந்தேகத்தின் வார்த்தைகளை அல்ல, விசுவாச வார்த்தைகளை - வெறுப்பின் வார்த்தைகளை அல்ல அன்பின் வார்த்தைகளை - புண்படுத்தும் வார்த்தைகள் அல்ல கனிவான வார்த்தைகளை உண்மையாக பேச எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, மனித பலவீனத்திலிருந்து நான் பேசத் தொடங்கும் போது என் வாய்க்கு காவல் அமைத்து, என்னை திருத்தும். ஆமென்
No comments:
Post a Comment