Scripture வேதவசனம்: ரோமர் 2:2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
Observation கவனித்தல்: தேவன் தம் நியாயத்தீர்ப்புகளுக்கு உணர்ச்சிகளையோ, அல்லது மனத்தோற்றங்களையோ, அல்லது பொய்சாட்சியையோ அடிப்படையாக பயன்படுத்துவதில்லை. மனித நியாயாதிபதிகள் ஒருவேளை இப்படிப்பட்டவைகளைப் பயன்படுத்தலாம், ஆனால் தேவன் அவ்வாறு செய்ய மாட்டார். அவருடைய நியாயத்தீர்ப்புகள் எப்பொழுதும் சத்தியத்தின் அடிப்படையில் இருக்கும். அவரை யாரும் ஏமாற்ற முடியாது. எந்த பொய்சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. எந்த சாக்குப் போக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
Application பயன்பாடு: சத்தியம் என்பது உண்மை ஆகும். என் கருத்துக்கள் சாதாரண கருத்துகளாகவே இருக்கிறது. பத்து பேரில் ஒன்பது பேர் என் கருத்தை ஏற்றுக் கொள்வதினால் அக்கருத்து மிகவும் உண்மையானதாக ஆகிவிடாது. எதிர்க்கருத்துகள் போராடும் போது சத்தியம் நிமிர்ந்து நிற்கிறது. அதிக உண்மை அல்லது கொஞ்சம் உண்மை என்று கிடையாது. உண்மையாக இருக்கவேண்டும் இல்லையே பொய்யாக இருக்கும், இரண்டில் ஒன்றுதான். என் தனிப்பட்ட வாழ்வில் நான் உண்மையைக் குறித்து மிகவும் தாழ்வாக கருதினால், என் பொதுவாழ்விலும் நான் உண்மையை மிகவும் குறைவானதாகவே கருதுவேன்.
இயேசுவில், “வழியும் சத்தியமும் ஜீவனுமானவரை” நான் காண்கிறேன் (யோவான்14:6). அவர் உண்மையைப் பேசி இருக்க வேண்டும் அல்லது பொய் பேசி இருக்க வேண்டும். இயேசுவைப் பற்றிய அனேக தனிப்பட்ட மற்றும் பொது விவாதங்களில், அவருடைய வார்த்தைகளின் உண்மை இன்றும் உயர்ந்து நிற்கிறது.
Prayer ஜெபம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் அனைத்தையும் சிருஷ்டித்தீர். எல்லா உண்மையும் உம்மிடமிருந்து வருகின்றது. உம்மைப் போல உண்மையை எவரும் புரிந்திட முடியாது. சத்தியத்தின் படி நான் வாழ உதவும். ஆமென்.
No comments:
Post a Comment