Scripture வேதவசனம்: சங்கீதம் 99:4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
ரோமர் 3:26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.
Observation கவனித்தல்: தேவனுடைய அன்பை தியானிப்பது ஆறுதலளிக்கிறது. தேவன் எவ்வளவதிகமாக நம்மை நேசிக்கிறார். ஆனால் அவர் நீதியையும் சினேகிக்கிறார். தேஅன் முற்றிலும் பரிசுத்தமானவர். அவர் நீதியுள்ளவர். அவரை நேசிப்பவர்கள் நீதியுள்ளவர்களாக மாற விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களையே நீதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்ள சக்தியற்றவர்கள். ஜனங்களை நேசித்து, நீதியை விரும்புகிற தேவன், ஆகவே தேவன் தம் குமாரனை ஜனங்களின் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தும்படி அனுப்பினார். இப்படிப்பட்ட அன்புடன் அருளப்படும் பரிசை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது எவ்வளவு முட்டாள்தனமானது.
Application பயன்பாடு: இயேசு என் பாவங்களுக்காக மரித்து எனக்கு மன்னிப்பை அளித்திருக்கிறார் என நான் விசுவாசிக்கிறேன். நான் பாவமே செய்யாதவன் போல, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன். வாவ். நான் இப்போது தேவனுடனான ஒரு நெருங்கிய உறவு கொள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். (1யோவான்.1-8-10)
Prayer ஜெபம்: கர்த்தாவே நீர் என்னுடன் நடந்து என்னுடன் பேசுகிறீர். நான் உம்முடையவர் என்று நீர் சொல்கிறீர். நான் உம்முடனே கூட இருக்கையில் பெறும் மகிழ்ச்சியை வேறு எவரும் அறியார். ஆமென்.
No comments:
Post a Comment