Scripture வேதவசனம்: கொலோசேயர் 2:13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
Observation கவனித்தல்: தேவனுடனான நம் உறவில், நாம் மரித்தவர்களாக இருந்தோம். அவருடைய பிரசன்னத்தையும் சத்தத்தையும் உணர முடியாதவர்களாக இருந்தோம். ஆனால் தேவன் நம் எல்லா பாவங்களையும் மன்னித்து நம்மை உயிர்ப்பித்தார். WOW! அவர் எப்படி இதைச் செய்தார்? நம் எல்லா பாவங்களையும் சிலுவையில் அறைந்து பின்னர் அவைகளுக்காக சிலுவையில் மரித்து நம் மேல் வரவேண்டிய தண்டணையை நீக்கிவிட்டார்.
என் கடன் சீட்டை வேறு ஒருவர் வங்கிக்கு எடுத்துச் சென்று என் சார்பாக முழுப் பணத்தையும் கட்டி என் கடனைச் செலுத்தி தீர்ப்பது போல உள்ளது.
Application பயன்பாடு: இயேசு என் பாவங்களை சிலுவையில் அறைந்து, அந்தச் சிலுவையில் மரித்தார். என் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கு என் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட கிரயத்தின் மதிப்பு மிகவும் அதிகம். தேவனுடைய பார்வையின் செலுத்தவேண்டிய மறைவான கிரயம் என எதுவும் இல்லை.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக செய்த எல்லாவற்றிற்காகவும் நான் எப்படி உமக்கு நன்றி சொல்வேன். நான் எவ்வாறு வாழ்கிறேன் என்பதில் நான் என் நன்றியைக் காண்பிக்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment