Scripture: John 4:7 அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
Observation கவனித்தல்: இந்த வேத பகுதியில், மற்றும் மூன்றாவது அதிகாரத்திலும், பல ஆச்சரியமான உண்மைகளை இயேசு வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக செய்யப்பட்ட ( மலைப் பிரசங்கத்தைப் போல்)ஒரு பிரசங்கமாக அல்லாமல் , தனிப்பட்ட நபர்களிடம் பேசுவதைக் காண்கிறோம். மூன்றாவது அதிகாரத்தில், தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்ற வார்த்தைகளை தனியே இரவில் தன்னைச் சந்திக்க வந்த நிக்கோதேமுவிடம் கூறினார். இந்த அதிகாரத்தில், உன்னுடனே பேசுகிற நானே அவர் (மேசியா) என்று வெளிப்படுத்துகிறார். இந்த முக்கியமான செய்திகளை ஒவ்வொருவரும் கேட்க வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. அதேவேளையில் தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்ளும்படிக்கு இவைகளைக் கேட்க வேண்டும்.
Application பயன்பாடு: என்னைப் பொறுத்தவரையில், ஒரு குழுவைச் சேர்ந்த மக்களுக்கு ஊழியம் செய்வது என்பது முன்னதாக ஜெபத்துடன் ஆயத்தம் செய்யப்பட்ட குறிப்புகளுடன் வருவதை உள்ளடக்கியிருக்கிறது. தனிப்பட்ட நபர்களுக்கு ஊழியம் செய்வது என்பது அவர்களின் கேள்விகளுக்கு (யோவான் 3 மற்றும் 4ம் அதிகாரங்களில் உள்ளது போல) பதிலளிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியப்படுத்துவதை மையப்படுத்தி அவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நான் ஒருவேளை அவர்களுடைய கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் தேவன் யாரையாவது என்னிடத்தில் கொண்டு வந்திருப்பாரெனில், என் வாழ்க்கையில் உள்ள ஏதாவதொரு காரியம் அவர்களுக்கு நன்மையாக இருக்கும் என்பதை அறிந்திருக்கிறார்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, உம் திட்டஙக்ளுக்கு பயனுள்ளவைகளைப் பேச எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment