Thursday, August 2, 2012

SOAP 4 Today - என் வாயில் பாதுகாப்பு

Scripture வேத்வசனம்: யோவான் 5:20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

Observation கவனித்தல்: பிதாவின் கனத்தை குமாரன் பெறும்படிக்கு பிதாவானவர் ஜீவனை அளிக்கும் மற்றும் நியாயந்தீர்க்கும் அதிகாரத்தைக் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். குமாரனாகிய இயேசுவைக் கனப்படுத்துவது என்பது பிதாவின் விருப்பம் ஆகும். பூமிக்குரிய தகப்பன்மார் தன் பிள்ளைகள் கனப்படுத்தப்படுவதைப் பார்க்க விரும்புவது போல, நம் பரலோகப்பிதாவும் தம் குமாரன் கனப்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறார். உண்மையில், பூமிக்குரிய தகப்பன்களைப் போல, நாம் அவருடைய குமாரனைக் கனப்படுத்தாமல் இருக்கையில் பரலோகப் பிதா துக்கமடைகிறார்.

Application பயன்பாடு: இன்று நான் என் பரலோகப் பிதாவின் குமாரனைக் கனப்படுத்துவதன் மூலம் அவரையே கனப்படுத்துகிறேன். இன்று நான் இயேசுவுக்கு செவிகொடுத்து அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை நான் கனப்படுத்துகிறேன். ஒரு குழந்தை தன் நண்பனைக் குறித்து சொல்லும்போது, “என் வாயில் அவருடைய பெயர் பாதுகாப்பாக இருக்கிறது” என்று சொன்னது. ஆகவே நான் அவருடைய பெயரை மரியாதையுடன் பேசுகிறேன். நான் அவரை ஆண்டவர் என்று அழைப்பேனாகில், நான் அது உண்மையாக இருக்குமளவுக்கு வாழ வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் ஆவியில் உம் சத்தத்தைக் கேட்டு, நீர் என்ன சொல்கிறீர் என்று புரிந்துகொள்ளவும் அதின்படிச் செய்யவும் எனக்கு இன்று உதவும். உம் பெயர் என் வாயில் பாதுகாப்பாக இருக்கிறது. ஆமென்.

No comments:

Post a Comment