Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 16:8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.
9. அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;
Observation கவனித்தல்: இங்கே உண்மையான ஒரு உலக உஷ்ணமயமாகுதல் நடக்கிறது. அது தேவனுடைய ஆலயத்தில் இருந்து அனுப்பப்பட்ட நான்காம் தூதனின் செயலால் உண்டாகிறது. நான் இதை வாசிக்கும் போது, இது சூழ்நிலைச் சார்ந்த ஒரு பிரச்சனை அல்ல ,சூரியனுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதைக் கண்டேன். இந்தப் பிரச்சனை நாம் நினைப்பதை விட பெரிதானதாக இருக்கக் கூடும். உலகம் உஷ்ணமாகிறது என்று சொல்பவர்கள், சூரியனின் வெப்பநிலை மாறினால் என்ன நேரிடும் என்று இதுவரை எதுவும் சொல்லி இருப்பதாக நான் கேள்விப்பட வில்லை. பூமியின் சூழ்நிலையை மாற்ற நாம் முயற்சி செய்ய முடியும், ஆனால் சூரியனுக்கு நம்மால் எதாவது செய்ய முடியுமா?
Application பயன்பாடு: சில நேரங்களில் ஒரு பிரச்சனை முதலில் நான் நினைத்ததை விட மிகவும் பெரிதாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது என் தேவனை விட பெரியது அல்ல, வெற்றிக்கான திறவுகோல் தேவனுடனான சரியான உறவு கொண்டிருப்பதே ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உடனடியாக உம்மிடம் திரும்புகிறவனாக இருக்க உதவும். ஆமென்.
No comments:
Post a Comment