Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 17:8 நீ, கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
9. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10. அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
11. இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
Observation கவனித்தல்: நான் வாசித்த அனேக வரலாற்று புத்தகங்கள் படங்கள் உள்ள பக்கங்களுடன் அல்லது காலவரிசையின் படி நடந்த சம்பவங்கள் கொண்டபக்கங்களை உடையதாக இருந்தன. அந்த கால வரிசை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து வேறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைவதாக இருக்கிறது. அதைக் கொண்டு வரலாற்று ரீதியாக மக்கள் மற்றும் சம்பவங்களின் வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியை ஒருவர் எளிதில் காண முடியும். மேற்கண்ட வசனங்களில் வரலாற்று கால வரிசை கடந்த காலத்தில் ஆரம்பித்து எதிர்காலத்தில் முடிகிறதை நாம் காண்கிறோம்.
Application பயன்பாடு : என் நினைவில் இருந்து நான் என் வாழ்க்கையைக் குறித்த வரலாற்று கால வரிசையை நான் உண்டாக்க முடியும். மேலும் விசுவாசத்தினால், என் தேவன் எனக்கு ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதாக வாக்குப்பண்ணி இருக்கிறபடியால் நான் எதிர்காலம் வரை அதை விரிவாக்க முடியும். இனி எனக்கு முன்பாக என்ன நேரிடும் என்பதை நான் அறியாவிடினும், என் கால வரிசை அவர் சமூகத்தில் முடிவு பெறும் என்பதை அறிந்திருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நாளைய தினத்தைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாலும்கூட, நீர் என்னுடன் இருப்பீர் என்றும், நான் மரிக்கும்போது நீர் என்னை உம்முடன் சேர்த்துக் கொள்வீர் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். இது எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆமென்.
No comments:
Post a Comment