Scripture:
1Corinthians 16: 17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச்
சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள்
செய்திருக்கிறார்கள்.
18. அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
18. அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.
Observation கவனித்தல்: பவுலைச் சந்திக்கும்படி கொரிந்துவிலிருந்து இம்மூவரும் பயணப்பட்டு வந்திருந்தனர். அவர்களின் வருகை பவுலின் ஆவிக்கு ஆறுதலாக இருந்தது. அவர்களின் வருகை அவனுடைய அப்போதைய போராட்டங்களை விட்டு கவனத்தைத் திருப்பி, கடந்த காலத்தில் தேவன் அவரை கொரிந்துவில் எவ்வளவு வல்லமையாக பயன்படுத்தினார் என்பதைக் காணச் செய்தது. அவர்கள் அவருடைய சுமையை இறக்கி வைத்தது போல காணப்பட்டனர். பவுல் கொரிந்துவில் இருந்தபோது தேவன் அவர்களுக்குச் செய்தவைகளைப் பற்றி அவர்கள் பேசினர். தான் நேசித்த மக்களுக்கு நடந்தவைகளைப் பற்றிய செய்து அவரை நிரப்பிற்று.
Application பயன்பாடு: நான் சந்திக்கும் நபரின் ஆவிக்கு ஆறுதலாக நான் இருக்கும்படி தேவன் என்னை பயன்படுத்த விரும்புகிறார். அவர்களுடன் கூட நான் இருந்து இதைச் செய்ய முடியும். தேவன் கடந்த காலத்தில் செய்தவைகளை நான் அவர்களுக்கு நினைவுபடுத்தக் கூடும். நம்பிக்கையுடன் இருக்கும்படி நான் உற்சாகப்படுத்தலாம். தேவன் எவ்வளவு பெரியவரும் நேசிக்கிறவருமாக இருக்கிறார் என்பதை நான் பேசலாம்.
Prayer ஜெபம்: கர்த்தாவே,
நீர் மற்றவர்களைப் பயன்படுத்தி என் மனதில் பின்னப்பட்டிருந்த வலையை உடைக்கவும், என் சிந்தையை புதுப்பிக்கவும் செய்தது போல, இன்று மற்றவரின் ஆவிக்கு ஆறுதல் அளிக்கும்படி என்னை பயன்படுத்தும், நீர் அவர்கள் மேல் கொண்டிருக்கும் மாபெரும் அன்பைப் பற்றி நாங்கள் பேசும்போது, அவர்கள் இருதயம் இலகுவாகி, அவர்கள் சுமை குறையட்டும். ஆமென்.
No comments:
Post a Comment