Sunday, December 2, 2012

SOAP 4 Today - காலம்

Scripture வேதவசனம்:   ரோமர் 5: 6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

Observation கவனித்தல்: குறித்த காலத்தில், நாம் உதவியற்றவர்களாக இருந்த போது, தேவன் மட்டுமே செய்யக் கூடியதை அவர் செய்தார். அவர் விலைக்கிரயத்தை செலுத்தினார். தேவனுடைய பிரமாணத்தை மீறியவர்களுக்கும் நிராகரித்தவர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும்படி இயேசு அவர்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்தினார்.               
 
Application பயன்பாடு:   1. எனக்கு தேவை என்று நான் உணர்வதற்கு முன்பே தேவன் இடைப்பட்ட தருணங்கள் உண்டு. என்ன வருகிறது என்பதை அவர் அறிந்து, அதற்குத் தேவையானதை அவர் என் கையில் தருகிறார். நான் அவரை நம்ப முடியும்!
2. கடைசி நேரம் மட்டும் நான் அவருடைய உதவியைப் பெறாத நேரங்களும் உண்டு. எனக்கு உதவி தேவைப்பட்ட அந்த நேரத்திலும் நான் அவரை நம்ப முடியும் என்பதை தேவன் எனக்கு காண்பிக்கிறார்.   
3.  நான் எதிர்பார்த்ததை விட காலதாமதமாக நான் தேவ உதவியைப் பெற்ற நேரங்களும் உ ண்டு. அவர் செயல்படுவதை நான் கவனிக்கையில், தேவன் ஒருபோதும் காலதாமதம் செய்வதில்லை என்று அறிந்து கொள்கிறேன். என் நேரத்தின் படி அவர் தாமதமாக இருந்தாலும்,  அவருடைய திட்டத்தை நிறைவேற்ற அவருக்கு போதுமான காலம் உண்டு.  மீண்டுமாக நான் அவரை நம்ப முடியும் என்பதை அவர் காண்பிக்கிறார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் காலம் எப்பொழுதுமே சரியானதாக இருக்கிறது. நீர் சரியான நேரத்திலேயே செயல்படுகிறீர். நான் உம்மை நம்ப முடியும். ஆமென்.

No comments:

Post a Comment