Saturday, January 12, 2013

SOAP 4 Today - அனைத்து விதமான பேராசை

 
Scripture வேதவசனம்:  லூக்கா 12: 15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

Observation கவனித்தல்:  கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு வருகிறது: “... இச்சையைக்  குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: ஏனெனில் ஒரு மனிதனின் வாழ்க்கை அவனிடம் இருக்கும் உடைமைகளினால் திருப்தியடைகிறதில்லை.”   பத்தாவது கட்டளையாவது ,” பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக” என்பதாகும். (யாத்திராகமம் 20:17)              
 
Application பயன்பாடு:  ஆங்கில வேதாகமத்தில் “எல்லாவிதமான பேராசை” என்ற வார்த்தை உள்ளது, அது என் கவனத்தை தீர்க்கிறது.  பேராசை என்பது பணம் அல்லது உடைமைகளின் மீது வருவது என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் மீது உள்ள தேவ ஆசீர்வாதம், மற்றவர்கள் பெறும் கனம், மற்றவர் பெற்று அனுபவிக்கும் மகிழ்ச்சி போன்ற பிற காரியங்களிலும் பேராசை வரக் கூடும் என இப்பொழுது நான் காண்கிறேன்.  எனக்கு உரிய கனத்தை மற்றவர் தராத போது அல்லது அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது நான் வருத்தமடைகிறேன்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே,  மற்றவர்கள் பெறும் எல்லா ஆசீர்வாதம், வெற்றி மற்றும் அவர்கள் பெறும் கனம் ஆகியவற்றில் மகிழ எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment