Sunday, January 13, 2013

SOAP 4 Today - அனைவராலும் கவனிக்கப்படுதல்

 
Scripture:   Luke 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2. அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.

Observation கவனித்தல்:  இயேசு எல்லா சமயங்களிலும் மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டார். சிலர் தேவைக்காகவும், சிலர் அவரைக் கவனிக்கும்படியாகவும் மற்றும் சிலர் அவரை நேசித்தபடியாலும் அவரை கவனித்தனர். இயேசுவின் மீது விமரிசனம் கொண்டவர்கள், அவர் எதாகிலும் தவறு செய்ய மாட்டாரா என்பதற்காக அ வரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்று இந்த வேதபகுதியில் வாசிக்கிறோம்.
 
Application பயன்பாடு :   என்னைக் கவனிப்பவர்களுக்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கும். ஆனால் என்னைக் கவனிப்பவர்களில் மிகவும் முக்கியமானவர் இயேசு ஆவார். அவர் என்னை நேசிப்பதால் என்னைக் கவனமாக கவனிக்கிறார். எனக்கு பாதுகாப்பளிக்கும்படியாகவும், பலனளிக்கும்படியாகவும் என்னை மகிழ்விக்கும்படியாகவும் அவர் என்னைக் கவனிக்கிறார்.   அவர் என் காவலாளி!
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் என்னைக் கவனிக்கிறீர் என்பது எவ்வளவு ஆறுதலானதாக இருக்கிறது. நான் எப்பொழுதும் உம் பார்வையிலேயே இருக்கிறேன். ஆமென்.

No comments:

Post a Comment