Monday, March 11, 2013

பலவீனம்/பலம்

Scripture வேதவசனம்:  கலாத்தியர்2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

Observation கவனித்தல்: நியாயப்பிரமாணத்தின் பலவீனத்தையும், சிலுவையின் வல்லமையையும் பற்றிய நிந்தனையை இந்த வசனம் தருகிறது. தேவனுக்கு என் நீதி எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் கருதும்படி செய்கிறது.  அவர் தம் குமாரனை மரிக்கும்படி அனுப்பினார் என்பது முக்கியமானது ஆகும். மிகவும் ஆச்சரியமானது! நாம் நீதிமான்களாக இருக்கும்படிக்கு நியாயப்பிரமானத்தை ஆசரிக்கக் கூடுமானால், இயேசுவின் பாடு மற்றும் மரணம் தேவையற்றதாக இருக்கும்.
சிலுவையில் இயேசு ஜெயித்தார். அந்தச் சிலுவையில்தானே நம் பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டது.   அங்கேயே இயேசு சோதனையை ஜெயித்தார். பிதாவின் சித்தத்திற்கு மாறாக செயல்படும்படி தூண்டிய பிசாசின் திட்டம் சிலுவையில் தோற்கடிக்கப்பட்டது. பிதாவின் சித்தத்தைச் செய்வதைத்தவிர வேறு எதற்கும் இயேசு இடம் கொடுக்கவில்லை.
இயேசு ஜெபம் பெற்றவராக மரணத்தில் பிரவேசித்தார்.  அவர் ஜெயம் பெற்றவராகவே கல்லறைக்குள் வைக்கப்பட்டார். அவர் முற்றிலும் ஜெயம் பெற்றவராக அங்கிருந்து உயிர்த்தெழுந்தார். 
 
Applicationபயன்பாடு: இயேசு சிலுவையில் பாவத்தையும், உயிர்த்தெழுதலில் மரணத்தையும் ஜெயித்தபடியால் அவர் வெற்றி வீரராக இருக்கிறார்.  அவருடைய வெற்றி வாழ்க்கை எனக்குள் இருப்பதால் அவர் இப்பொழுது முற்றிலும் ஜெயம் பெற்றவராகவே இருக்கிறார். 

Prayer ஜெபம்:  கர்த்தாவே, நான் இரட்சிக்கப்பட்டதினால் உம்மை சேவிக்கவில்லை. மாறாக நீர் எனக்குச் செய்தவைகளுக்காக நான் உம்மை சேவிக்கிறேன். ஆமென்
 

No comments:

Post a Comment