Scripture வேதவசனம்: உபாகமம் 7:17 அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால்,
18. உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும்,
19. உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார்.

Observation கவனித்தல்: மோசே அவர்களுடன் இனி போகப் போவதில்லையாதலால், அவர் இஸ்ரவேலர்களுக்கு வாக்குத்தத்த பூமிக்குள் பிரவேசிக்க அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் இறுதி வழிகாட்டல்களைக் கொடுத்தார். இனி வரப் போகிற யுத்தங்களில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் தேவன் அவர்களுக்குச் செய்தவைகளை நினைத்துப் பார்ப்பார்கள் எனில், அவர்கள் அவருடைய திறமையை சந்தேகிக்கவே மாட்டார்கள்.
Application பயன்பாடு: நான் என் திறமையைச் சந்தேகிக்கும்போது, நான் என் திறமைகளைச் சார்ந்து அல்ல, நான் தேவனுடைய வல்லமையைச் சார்ந்திருக்கிறேன் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். என் வாழ்வில் வருகிற ஒவ்வொரு காரியத்திற்கும் அவருடைய வல்லமை போதுமானதாக இருக்கிறது. நான் இதை நன்றாக சிந்திக்க வேண்டும். நான் என் மனதை புதுப்பிக்கிறேன். நான் எவ்வளவு அதிகமாக பழையவைகளை நினைத்துப் பார்க்கிறேனோ அந்தளவுக்கு நான் மகிழ்ச்சிஅடைய வேண்டும். நான் நினைத்துப் பார்த்து, விசுவாசத்தில் நடக்க முடியும்.
Prayer ஜெபம் : கர்த்தாவே, வேதாகமத்தில் நான் வாசித்ததில் இருந்தும், என் கடந்தகால நினைவுகளில் இருந்து நினைவுகூறுவதில், என் வாழ்வில் வரும் சவால்களைச் சமாளிக்க நீர் போதுமானவர் என்பதை அறிந்து கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment