Scripture வேதவசனம்: சங்கீதம் 11:1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2. இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
2. இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
Observation கவனித்தல்: நம்மில் அனேகர் கண்டுகொள்கிறதையே தாவீதும் கண்டுகொண்டார். நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் எப்பொழுதுமே இருக்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் இருக்கும் பிரச்சனையை அவர்கள் காண்பதில்லை; நாம் எதிர்கொள்கிற அம்புகளை அவர்கள் காண்பதில்லை. தாவீது முன்னமே தன் அடைக்கல ஸ்தலத்தை கண்டுகொண்டார்.
Application பயன்பாடு: கர்த்தர் என் அடைக்கலம். அவர் அடைக்கலமாக இருப்பதிலும் மேலானவர். அவர் என் மறைவிடம். அவர் என் பாதுகாப்பு. அவர் என் சமாதானம் மற்றும் அவரே என் இளைப்பாறுதல் ஆவார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீரே நான் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் கண்டுகொள்கிற பாதுகாப்பான இடம். ஆமென்.
No comments:
Post a Comment