Wednesday, April 17, 2013

என் இருதயத்திலிருந்து என் தேவனுக்கு நேராக

Scripture வேதவசனம்: சங்கீதம் 59:16  நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17. என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

Observation கவனித்தல்: தாவீது தனிப்பட்ட முறையில் தேவனுடைய பலத்தையும் அன்பையும் குறித்து பாடுவார். ஏன்?  ஏனெனில் தேவன் தனிப்பட்ட முறையில் தாவீதுக்கு பலனாகவும், கோட்டையாகவும் அடைக்கலமாகவும் இருந்தார். தேவன் தாவீதுக்குக் கோட்டையாக, அடைக்கலமாக பெலனாக இருந்தார் என்பதைக் குறித்து வேறு ஒருவர்   பாடவில்லை. தாவீதே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
 
Application பயன்பாடு: தேஅன் என் கோட்டை. என் அடைக்கலம். அவரே என் பெலன். நான் என் தேவனைக் குறித்துப் பாட வேண்டும்.  என் பாடல் வரிகள் எதுகை மோனை இல்லாதிருக்கலாம்.  என் பாடலின் ராகம் மற்றவர்களுக்கு இனிமையானதாக இல்லாதிருக்கலாம்.  ஆனால் என் இருதயத்தில் இருக்கும் துதியானது தேவனுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, என் கோட்டையே, என் அடைக்கலமே என் பெலனே உம்மை நான் துதிக்கிறேன்.  ஆமென்.
 

No comments:

Post a Comment