Sunday, June 23, 2013

பணத்தின் பயன்பாடு

Scripture வேதவசனம்:   1 தீமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
8. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.

Observation கவனித்தல்:  நம் வாழ்க்கையில் பணம் மிக முக்கியமானதாகவும், நம் முன்னுரிமைகளை அதன் மூலம் வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.  உலகப் பணத்திற்கு பரலோகில் எந்த மதிப்பும் இல்லை.  தேவன் இந்த உலகில் பணத்துடன் இருக்கும்படி வைக்கவில்லை.  அந்தப் பணத்தை நாம் எடுத்துக் கொண்டு பரலோகம் செல்ல முடியாது.  அதனால்தாம் நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை நித்திய மதிப்புடன் கூடிய காரியங்களுக்குச் செலவிட வேண்டும்.
 
Application பயன்பாடு:  என் வாழ்க்கையில் எனக்குள்ள பெரும் சவால்களில் ஒன்று என்னிடம் உள்ள பணத்தை முறையாக செலவழிப்பது ஆகும். என்னிடம் இருக்கும் பணத்தில் இருந்து சிறந்த மதிப்பைப் பெறுவது ஒரு சவால் ஆகும். பணம் மதிப்புடையது என்பதால், அதை முக்கியமல்லாத காரியங்களில் வீணடிக்கக் கூடாது. மற்றொரு சவால் என்னவெனில், அவருடைய சித்தத்தைச் செய்து முடிக்கத் தேவையானவைகளை அவர் தருவார் என்பதாகும்.  மூன்றாவதாக,  என்னிடம் இருப்பவைகளை தேவனுடைய ராஜ்ஜிய விரிவாக்கத்திற்காக எப்படி செலவிடுவது என்பதாகும். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் எனக்குக் கொடுத்திருக்கிற பணத்தை ஞானமாக செலவழிக்க பரிசுத்த ஆவியானவரின் உதவி எனக்குத் தேவை.நான் பணத்தைச் செலவழிக்கையில் உம் முன்னுரிமைகள் காண்பிக்கப்படட்டும். ஆமென்.

No comments:

Post a Comment