Monday, July 8, 2013

தேவனுடைய சமூகத்தில் சரியான உணர்வுகளை வெளிப்படுத்துதல்

Scripture வேதவசனம்:   சங்கீதம் 100:1  பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

Observation கவனித்தல்:   தேவனுடைய சமூகத்தில், மகிழ்ச்சியும் சந்தோசமும், ஆனந்த சத்தமும் பாடல்களுமே வெளிப்படுத்துவதற்குகந்த உணர்வுகள் ஆகும்.  மேற்கண்ட வசனத்தில், மகிழ்ச்சியானது ஆராதனையின் ஒரு பகுதியாக எனக்குச் சொல்லப்பட்டிருகிறது. 
 
Application பயன்பாடு:  என் ஆனந்த சத்தம் மற்றும் பாடல்களுக்கு என் சூழ்நிலைகள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் என்னைப் படைத்தவரை அறிந்திருக்கிறேன். நான் அவருடையவன். மகிழ்ச்சியாக இருப்பதற்கு எனக்கு அனேக காரணங்கள் உண்டு. என் இருதயத்தின் உண்மையான மகிழ்ச்சி சில வெளிப்படையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, சூழ்நிலைகள் என்னை நம்பிக்கையற்றவனாக, மகிழ்ச்சி அற்றவனாக மற்றும் கவலைப்படுகிறவனாக மாற்றும் போது, தேவனே, உம் பிரசன்னம் என்னை ஆனந்த சத்தத்துடனும் பாடலுடனும் மகிழ்வுடன் உம்மை ஆராதிக்கச் செய்ய வைக்கிறதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment