Tuesday, July 9, 2013

தேவனுடைய திட்டம்: வளர்ச்சி

Scripture வேதவசனம்:  எபிரேயர் 6:1   ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.

Observation கவனித்தல்: ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய திட்டம் ஆகும். அதேவேளையில், இரட்சிக்கப்பட்டவர்களுக்காகவும் தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அவர்கள் வளர்ந்து பூரணர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்.  வளர்ச்சி என்பது மெதுவானதாகவும், அனுதினமும் கணக்கிட கடினமானதாகவும் தோன்றலாம். ஆயினும் 6 மாதங்கள் அல்லது வருடம் கழித்து நாம் எவ்வாறு சூழ்நிலைகளைக் கையாளுகிறோம் என்பதைக் கவனிக்கையில் அது வளர்ச்சியை கணக்கிடத்தக்க அளவில் வெளிப்படுத்த வேண்டும்.
 
Application பயன்பாடு: என் வளர்ச்சி தேவனுக்கு முக்கியமானது ஆகும். தேவனுடைய வார்த்தையானது என் வாழ்வில் முன்னுரிமை பெறும்போது, நான் அதிகமதிகமாக தேவனுடைய கண்ணோட்டத்தைப் பெறுகிறேன்.  என் வாழ்க்கை இயேசுவைப் போலவும், பரிசுத்த ஆவியான்வரின் கட்டுப்பாட்டிலும் மாறுகிறது.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம்மைப் போல மாறுமளவுக்கு வளர எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment