Showing posts with label நற்செய்தி அறிவிப்பு. Show all posts
Showing posts with label நற்செய்தி அறிவிப்பு. Show all posts

Monday, September 26, 2011

SOAP 4 Today - அனுப்பப் பட விருப்பம்

வாசிக்க வேண்டிய வேதபகுதி: ஆகாய் 1,2; சங்கீதம் 129; லூக்கா 10.

Scripture வேதவசனம்: லூக்கா 10:2 அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்

Observation கவனித்தல்: அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது. விளைநிலம் அறுப்புக்குத் தயாராக இருப்பதைக் காண்பது தேவன் தேவைப்படும் ஜனங்களைக் குறித்து ஒரு சித்திரமாக இருக்கிறது.

அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுடையவர்களாக மாத்திரம் இல்லாமல், அதற்காக ஜெபிக்கவும் செய்யவேண்டியதாயிருந்தது. வேலையாட்களுக்காக அவர்கள் குறிப்பாக ஜெபிக்க வேண்டியதிருந்தது.

அவர்கள் அறுவடையைக் குறித்து அறிந்து ஜெபிப்பதோடல்லாமல், அவர்கள் புறப்பட்டு போகவும் வேண்டியதாயிருந்தது. தங்கள் சொந்த ஜெபங்களுக்கு பதிகளாக அவர்களே மாறினார்கள்.

Application: ஒருவருடைய இரட்சிப்பைக் குறித்து நான் அக்கறையுடையவனாக ஆகும்போது, அவர்களுக்காக ஜெபிப்பது எனக்கு விசித்திரமானது அல்ல. சில்வேளைகளில் அவர்களிடம் பேசும்படி யாரையாவது அனுப்பும் என்று குறிப்பாக ஜெபிப்பதுண்டு. ஏற்கனவே இயேசுவை அனுப்பிவிட்டீர் என்பதை நான் நினைவுகூர உதவும். ஆகவே இப்போது அந்த ஜெபங்களுக்குப் பதில்களாக நானே அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்கிறேன்.

Prayer: பிதாவே, அறுவடையின் ஆண்டவரே, நீர் ஏற்கனவே உம் மகனாகிய இயேசுவை இரட்சிப்பை அருளும்படி அனுப்பியிருக்கிறீர். நான் ஜெபிக்கிறவர்களுக்காக அவரைப் போல அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்க உதவும். ஆமென்.

Friday, June 10, 2011

SOAP 4 Today - நற்செய்தியைப் பேசவேண்டிய விதம்

Scripture வேத வசனம்: எபேசியர்.6: 19. சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக,

20. நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.

Observation கவனித்தல் : எபேசு சபை விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இந்த் கடிதத்தை சிறைச்சாலையிலிருந்து எழுதினார். கடிதத்தை எழுதி முடிக்கும் போது, தனக்காக அவர்கள் வேண்டிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறார். அவர் சிறைச்சாலையில் இருந்தாலும்கூட, தான் விடுவிக்கப்படவேண்டும் என்றோ, அல்லது காவலாளர்கள் தன்னை மரியாதையாக நடத்தவேண்டும் என்றோ, அல்லது நல்ல படுக்கை வசதியுடன் கூடிய அறை வேண்டும் என்றோ, அல்லது சிறையில் தன் அறை சுகாதாரமானதாக இருக்கவ் வேண்டும் என்றோ அவர் கேட்க வில்லை. அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு நற்செய்தி கேட்பது அவசியமானதாக இருந்தது, அந்நற்செய்தி இயேசு கிறிஸ்துவைப் பற்றியதே. நற்செய்தியை தைரியமாக பிரசங்கிக்க அவர்கள் ஜெபம் பண்ண வேண்டும் என விரும்பினார். நற்செய்தி இவ்விதமாகவே பயமின்றி அறிவிக்கப்படவேண்டும்.

Application பயன்பாடு : மிகவும் விலையேறப்பெற்ற இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியைப் பேசுவதற்கு என் வாயைத் திறக்க நான் ஒரு போதும் தயங்க மாட்டேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் பேசவேண்டிய விதமாக, தைரியமாக நற்செய்தியை அறிவிக்க உதவும். ஆமென்!

AS I SHOULD!

Scripture: Ephesians 6: 19 ¶ Pray also for me, that whenever I open my mouth, words may be given me so that I will fearlessly make known the mystery of the gospel,
20 for which I am an ambassador in chains. Pray that I may declare it fearlessly, AS I SHOULD.

Observation: From prison Paul is writing this letter to the believers in the city of Ephesus . As he closes he requests that they pray for him. Although he is in prison, he is not asking to be released, or that the guards will treat him well, or that the floor will be a softer bed, or that the cell will be less damp. There were people around him who needed to hear the gospel, the good news about Jesus. He wanted them to pray for boldness to share the gospel. That is the way the gospel should be proclaimed: fearlessly!

Application: The gospel is of such value that I should never hesitate to open my mouth to speak the truth.

Prayer: Lord, that I may declare the gospel fearlessly, AS I SHOULD! Amen.


Note: Friends From today onwards SOAP meditations tamil translation will be posted regularly