Showing posts with label ஜெபம். Show all posts
Showing posts with label ஜெபம். Show all posts

Monday, September 26, 2011

SOAP 4 Today - அனுப்பப் பட விருப்பம்

வாசிக்க வேண்டிய வேதபகுதி: ஆகாய் 1,2; சங்கீதம் 129; லூக்கா 10.

Scripture வேதவசனம்: லூக்கா 10:2 அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்

Observation கவனித்தல்: அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது. விளைநிலம் அறுப்புக்குத் தயாராக இருப்பதைக் காண்பது தேவன் தேவைப்படும் ஜனங்களைக் குறித்து ஒரு சித்திரமாக இருக்கிறது.

அவர்கள் அறுவடையைக் குறித்த அறிவுடையவர்களாக மாத்திரம் இல்லாமல், அதற்காக ஜெபிக்கவும் செய்யவேண்டியதாயிருந்தது. வேலையாட்களுக்காக அவர்கள் குறிப்பாக ஜெபிக்க வேண்டியதிருந்தது.

அவர்கள் அறுவடையைக் குறித்து அறிந்து ஜெபிப்பதோடல்லாமல், அவர்கள் புறப்பட்டு போகவும் வேண்டியதாயிருந்தது. தங்கள் சொந்த ஜெபங்களுக்கு பதிகளாக அவர்களே மாறினார்கள்.

Application: ஒருவருடைய இரட்சிப்பைக் குறித்து நான் அக்கறையுடையவனாக ஆகும்போது, அவர்களுக்காக ஜெபிப்பது எனக்கு விசித்திரமானது அல்ல. சில்வேளைகளில் அவர்களிடம் பேசும்படி யாரையாவது அனுப்பும் என்று குறிப்பாக ஜெபிப்பதுண்டு. ஏற்கனவே இயேசுவை அனுப்பிவிட்டீர் என்பதை நான் நினைவுகூர உதவும். ஆகவே இப்போது அந்த ஜெபங்களுக்குப் பதில்களாக நானே அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்கிறேன்.

Prayer: பிதாவே, அறுவடையின் ஆண்டவரே, நீர் ஏற்கனவே உம் மகனாகிய இயேசுவை இரட்சிப்பை அருளும்படி அனுப்பியிருக்கிறீர். நான் ஜெபிக்கிறவர்களுக்காக அவரைப் போல அனுப்பப்படும்படி நான் விருப்பமுடையவனாக இருக்க உதவும். ஆமென்.

Wednesday, July 27, 2011

தேவன் தரும் மகிழ்ச்சி

வாசிக்க: ஏசாயா 53-56; 2 பேதுரு 2

Scripture வேதவசனம்: ஏசாயா 56:7 நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

Observation கவனித்தல்: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். ஜெபவீடு மகிழ்ச்சியில் இடம் ஆகும். அது தேவன் தரும் மகிழ்ச்சியின் இடம் ஆகும். அங்கே நாம் ஐக்கியத்தின் மகிழ்ச்சியைப் பெறுகிறோம். அங்கே நாம் பங்கெடுத்துக் கொள்வதின் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறோம். மேலும் வெற்றியின் மகிழ்ச்சியையும் கண்டுகொள்கிறோம்.

"சகலருக்கும் ஜெபவீடு." இந்தப் பகுதியில் அனைவரும் தேவனுடைய வீட்டிற்கு ஜெபிக்க வரவேற்கப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். எல்லாருக்காகவும் ஜெபங்களை ஏறெடுக்கிற ஒரு இடமாக இருக்கவேண்டும் என்றில்லை என்றாலும், இந்த வேதபகுதி தேவனை கனம் பண்ண விரும்பும் புறஜாதியாருக்குப் பொருந்துகிறது. அவரகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுடைய ஜெபம் கேட்கப்படும்.

Application பயன்பாடு: சிலவேளைகளில் என்னுடைய ஜெபங்களை விட மற்றவர்களுடைய ஜெபங்கள் தேவன் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எனக்காக ஜெபிக்கவிரும்புகிறேன். எனக்காக மற்றவர்கள் ஜெபிப்பது நல்லது. ஆனால் தேவன் என் ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்பதினாலோ புரிந்து கொள்ள முடியாது என்பதினாலோ மற்றவர்கள் எனக்காக ஜெபிக்கக் கூடாது. ஜெபத்தின் தேவனை அணுகுவதற்கு எனக்கு எந்த தடையுமில்லை என்பதை நான் அறிந்து கொள்வது நல்லது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, ஜெபத்தில் உம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்ற என் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறீர் என்பதி நீர் எனக்கு தெளிவுபடுத்தியதற்காக உமக்கு நன்றி. ஆமென்

Thursday, April 22, 2010

Soap 4 Today 10 - நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதம்

வாசிக்க: 1 சாமுவேல் 22; ச்ங்கீதம் 35; மத்தேயு 6.

Scripture வேத வசனம்: மத்தேயு 6: 9-13 " நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்!

Observation கவனித்தல் : “ நீங்கள் பண்ண வேண்டிய ஜெபம் இதுதான்” என்றோ அல்லது “ நீங்கள் ஜெபிக்கும்போது இந்த வார்த்தைகளை பயன்படுத்துங்கள்” என்றோ இயேசு கூற வில்லை. மாறாக “ நீங்கள் ஜெபிக்கும்போது இந்த விதமாக ஜெபியுங்கள்’’ என்றார்.

Application பயன்பாடு: கர்த்தரின் ஜெபத்தில் உள்ள கருத்துக்களை நான் எடுத்துக் கொண்டு அவற்றை “ எனது” ஜெபத்தில் பயன்படுத்தவேண்டும். நான் அதை எவ்வாறு பயன்படுத்துகிறேன் என்பதை கேட்க தேவன் ஆவலாக இருக்கிறார்

Prayer ஜெபம் : பிதாவே, என்னை சுற்றியிலும் இருக்கிற எல்லா காரியங்களௌக்கும் மேலாக, நீர் பரலோகத்தில் இருக்கிறீர். ஆனாலும் உம்முடன் பேசவேண்டும் என்றும் நீர் எனக்கு செவிகொடுப்பீர் என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. உம்முடைய நாமம் பரிசுத்தமானது. அதை மிகுந்த பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். நீர் என் வாழ்க்கையை ஆட்சி செய்ய விரும்புகிறேன். பரலோகத்தில் உள்ள தூதர்களைப் போல அர்ப்பணிப்புடன் நான் உம்முடைய விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன். இன்று எனக்கு உம் பாதுகாப்பு தேவை. இன்று எனக்கு உம் மன்னிப்பு தேவை. ஆனால் நான் மற்றவர்களை எவ்வாறு மன்னிக்கிறேனோ அதைப் போலவே நீர் என்னை மன்னிக்கிறீர் என்பதால், என்னை வேதனைப்படுத்தியவர்களை மன்னிக்க உமது உதவி எனக்கு மிகவும் தேவையாயிருக்கிறது. எனது நடையைக் காத்தருளும். பிசாசு சோதிக்கும் போது அதை அறிந்து எதிர்த்து நிற்க பலன் தாரும். எனது ஆவி ஆத்துமா சரீரம் மற்றும் எனதெல்லாமும் உமக்கே சொந்தம். உம் ஆட்சிக்கு உரியவை. நான் உமது பலத்தில் இன்று வாழ்வேம் ஆமென்.

1Samuel 22; Psalm 35; Matthew 6

In this manner…

Scripture: Matthew 6:9-13 "In this manner, therefore, pray: Our Father in heaven, Hallowed be Your name. Your kingdom come. Your will be done On earth as it is in heaven. Give us this day our daily bread. And forgive us our debts, As we forgive our debtors. And do not lead us into temptation, But deliver us from the evil one. For Yours is the kingdom and the power and the glory forever. Amen.

Observation: Jesus did not say, “Here is a prayer for you to pray, “ or, “Use these words when you pray, “ but, “In this manner, therefore, pray…”

Application: I am to take the thoughts of the Lord’s prayer and put them into “ Leon talk.” God wants to hear it how I would say it.

Prayer: Father, you live in the heavens, far above all the things that surround me. Yet I am told to talk to you and you will hear me! That is amazing! Your name is holy and to be spoken of with great respect. I want your government ruling in my life. I want to do your will with the same devotion as the angels in heaven. Today I need protection as Sharon and I travel to Delaware . Today I need your forgiveness, but since you forgive me in the same way I forgive others, I desperately need your help in forgiving those who have hurt me. Guide my steps today. Make me aware when the devil is tempting me and give me strength to resist. My body, soul and spirit—all that I am and all that I have—are yours to rule as best brings honor to you. And today I will live in your strength. Amen.

Monday, April 12, 2010

SOAP 4 Today - 2

வாசிக்க: 1 சாமுவேல் 11,12, 1 நாளாகமம் 1, 2 கொரிந்தியர் 11

Follow-up பின் தொடர்பு

Scripture வேத வசனம்: 1 சாமுவேல் 12:23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.

Observation கவனித்தல் : சாமுவேல் திரும்பவும் தனது பணிக்கு அழைக்கப்பட்டாலும் கூட, இச்சமயத்தில் அவர் இஸ்ரவேலின் தமைமைத்துவத்தை ஒரு ராஜாவுக்கு மாற்றிக் கொடுத்து விட்டு மக்களின் புகழில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டார். தனது தொட்ர்ச்சியான/பின் தொடர்புப் பணியின் முக்கியமானதொரு பகுதியாக அவர் ஜெபத்தைக் கண்டார். அதைச் செய்யாமலிருந்தால் பாவமாயிருக்கும் என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர் ஜெபிக்க பெலனுள்ளவராக இருந்தமட்டும் அவருடைய பணி முடியவில்லை.

Application பயன்பாடு : எனக்கு பிரியமானவர்களின் வாழ்க்கையில் உற்சாகமாக ஈடுபடுவதிலிருந்து நான் விலகி இருக்க வேண்டிய நேரங்கள் உண்டு, ஆனால் எனது வேலை முடிந்து விட்டது என்பதை அது குறிப்பதில்லை. நான் ஜெபிக்க முடியும். எனது மகன் முதன்முறையாக பள்ளிக்கூடம் போகும் போது ம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் நான் ஜெபிக்கலாம். நான் வேலைக்காக வீட்டைவிட்டுச் செல்லும் போது நான் ஜெபிக்க முடியும். ஒரு நாளோ அல்லது வருடமோ நான் வீட்டில் இல்லாமல் இருக்க வேண்டியது வந்தால், நான் ஜெபிக்க முடியும். இன்னொரு பராமரிப்பாளரிடம் பிரச்சனை ஒப்படைக்கப் படும்போது நான் ஜெபிக்க முடியும். எனக்கு ஜெபிப்பதற்கு நேரமில்லாமல் நான் அவர்களுக்கு உதவுவதில் மும்முரமாக செலவழித்த சக்தியைக் காட்டிலும் அதிகமாக என் ஜெபங்கள் உதவிகரமாக இருக்கக் கூடும். நான் ஜெபிக்காத வரைக்கும் எந்தவிதமான பின் தொடர்புப் பணியும் முழுமையானது அல்ல.

Prayer ஜெபம் : ஆண்டவரே, நான் ஜெபிக்காத வரைக்கும் எனது வேலை முடிவடைவதில்லை. ஜெபிக்கும்படிக்கு என் மனதில் எண்ணத்தைத் தாரும். ஆமென்!

Read: 1Samuel 11-12; 1Chronicles 1; 2Corinthians 11

Follow-up

Scripture: 1Samuel 12:23 As for me, far be it from me that I should sin against the LORD by failing to pray for you. And I will teach you the way that is good and right.

Observation: Although Samuel would be called back into duty, he was at this time turning the leadership of Israel over to a king and stepping back out of the limelight. He saw prayer as being an important part of his continuing/follow-up ministry. It was so important that not doing it would be sin. As long as he was able to pray, his job was not over.

Application: There are times when I have to step back from active involvement in the lives of those special to me, but that does not mean my job is over. I can pray. I could pray when my son headed out to his first day of school, and every school day. I can pray as I drive off from my house, heading to work. If I must be absent from my family for a day or a year, I can pray. I can pray when the crisis has moved into the hands of other caregivers. It may be that my prayers are more helpful than the energy I invested when I were so busy helping them that I did not have time to pray! Any type of follow-up work is not complete until I have prayed.

Prayer: Lord, my job is not over until I have prayed. Put the thought in my mind to pray. Amen.