Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Wednesday, July 27, 2011

தேவன் தரும் மகிழ்ச்சி

வாசிக்க: ஏசாயா 53-56; 2 பேதுரு 2

Scripture வேதவசனம்: ஏசாயா 56:7 நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

Observation கவனித்தல்: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். ஜெபவீடு மகிழ்ச்சியில் இடம் ஆகும். அது தேவன் தரும் மகிழ்ச்சியின் இடம் ஆகும். அங்கே நாம் ஐக்கியத்தின் மகிழ்ச்சியைப் பெறுகிறோம். அங்கே நாம் பங்கெடுத்துக் கொள்வதின் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறோம். மேலும் வெற்றியின் மகிழ்ச்சியையும் கண்டுகொள்கிறோம்.

"சகலருக்கும் ஜெபவீடு." இந்தப் பகுதியில் அனைவரும் தேவனுடைய வீட்டிற்கு ஜெபிக்க வரவேற்கப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். எல்லாருக்காகவும் ஜெபங்களை ஏறெடுக்கிற ஒரு இடமாக இருக்கவேண்டும் என்றில்லை என்றாலும், இந்த வேதபகுதி தேவனை கனம் பண்ண விரும்பும் புறஜாதியாருக்குப் பொருந்துகிறது. அவரகள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுடைய ஜெபம் கேட்கப்படும்.

Application பயன்பாடு: சிலவேளைகளில் என்னுடைய ஜெபங்களை விட மற்றவர்களுடைய ஜெபங்கள் தேவன் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எனக்காக ஜெபிக்கவிரும்புகிறேன். எனக்காக மற்றவர்கள் ஜெபிப்பது நல்லது. ஆனால் தேவன் என் ஜெபங்களைக் கேட்க மாட்டார் என்பதினாலோ புரிந்து கொள்ள முடியாது என்பதினாலோ மற்றவர்கள் எனக்காக ஜெபிக்கக் கூடாது. ஜெபத்தின் தேவனை அணுகுவதற்கு எனக்கு எந்த தடையுமில்லை என்பதை நான் அறிந்து கொள்வது நல்லது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, ஜெபத்தில் உம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்ற என் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறீர் என்பதி நீர் எனக்கு தெளிவுபடுத்தியதற்காக உமக்கு நன்றி. ஆமென்

Monday, July 25, 2011

SOAP 4 Today - மிகப் பெரிய சந்தோசம்

வாசிக்க: ஏசாயா 43-45; 1 பேதுரு 4.

Scripture வேதவசனம்: 1பேதுரு 4:10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

Observation கவனித்தல்: அநேகர் வரங்களைப் பெறுவதில் சந்தோசமடைகிறார்கள். ஒருவர் சம்பாதிக்காத ஒன்றை போதுமான அளவுக்கு பரிசாக கொடுக்கவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். பரிசுகளைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியில் மற்றுமொரு பகுதி என்ன்வெனில், அந்தப் பரிசு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தப்படுவது ஆகும். பரிசுகளைப் பெறும்போது கிடைக்கும் சந்தோசத்தை விட அந்தப் பரிசு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படும்போது அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

Application பயன்பாடு: ஓ, ட்ஏவனுடைய ஈவுகளை நான் சுயநலமாக பயன்படுத்தும்போது எவ்வளவாய் சந்தோசத்தை தவறவிடுகிறேன். பெறுவதில் உண்டாகும் மகிழ்ச்சியைக் காட்டிலும் மிக அதிக மகிழ்ச்சியை நாம் பெறவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கொடுப்பதில் உண்டாகும் மகிழ்ச்சியை நான் அடைய அவர் விரும்புகிறார் - ஆகவே நான் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடிய ஒன்றை எனக்குத் தருகிறார். ஆசீர்வாதமாக நான் இருக்கும்படி அவர் என்னை ஆசீர்வதிக்கிறார்.

Prayer ஜெபம் : கர்த்தாவே, மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படியான ஈவுகளை நீர் எனக்குத் தருகிறதற்காக உமக்கு நன்றி. உண்மையாகவே நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஆமென்.

Friday, July 1, 2011

மிகுந்த மகிழ்ச்சி

வாசிக்க: ஏசாயா.4,5; சங்கீதம்.115,116; யூதா

Scripture வேதவசனம்: யூதா.24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

Observation கவனித்தல்: யூதா வேறு ஏதோ ஒன்றை எழுத நினைத்திருந்தார். ஆனால் உலகத்தைல் அவரைச் சுற்றி நடந்து கொண்டிருயிருவைகளைப் பார்த்தபோது, தன் நிருபம் விசுவாசிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் வகையில் எழுதுவது தன் கடமை என உணர்ந்தார். முதல் 19 வசனங்களில் சபைக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கும் உலக துன்மார்க்கத்தைப் பற்றி குறீபிடுகிறார். 20முதல் 23 ஆம் வசனங்களில் விசுவாசிகளின் பொறுப்பைக் குறித்து எழுதி, அவர்கள் தீமைக்கு விலகி இருப்பதற்கு சில வழிகாட்டுதல்களைத் தருகிறார். அவர் தன் சிறிய நிருபத்தை மேலே கண்ட வசனத்தோடு முடிக்கிறார். ஜெபிப்பதும், அவருடைய அன்பில் நிலைத்திருப்பதும் மற்றும் மற்றவர்களுக்கும் போதிப்பது ஆகிய நாம் செய்ய வேண்டியவைகளைச் செய்யும்போது, தேவன் நம்மை மிகுந்த மகிழ்ச்சியோடு அவருடைய சந்நிதானத்தில் நம்மை நிறுத்துவார் என்பதைக் குறித்து நாம் உறுதியாய் இருக்க முடியும்.

Application பயன்பாடு: மிகுந்த மகிழ்ச்சியோடே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்தப்படுவது, எவ்வளவு சிறப்பான நாளாக இருக்கும்? நான் நிறுத்தப்படுவதைக் குறித்த எனது மகிழ்ச்சி மாத்திரமல்ல, என்னை தேவனுக்கு முன்கொண்டு போய் நிறுத்துபவரின் மிகுந்த மகிழ்ச்சியான நாளாகவும் இருக்கும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே,நான் உமக்கு முன்பாக நிற்கும்போது, என் இருதயமும் உம் இதயமும் மிகுந்த மகிழ்ச்சியினால் நிரப்பப்படுவதாக. ஆமென்.

Monday, June 13, 2011

SOAP 4 Today - மகிழ்ச்சியாயிருங்கள்

வாசிக்க: 1 இராஜாக்கள்.15, 2நாளாகமம் 13,14, பிலிப்பியர் 4.

Scripture வேத வசனம்: பிலிப்பியர்.4:4. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

Observation கவனித்தல் : பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தைல் தான் எழுதியதையே பவுல் திரும்பவும் எழுதுகிறார். தேவனுடைய கிருபை எப்பொழுதும் கிடைக்கிறது எனில், தேஅனுடைய அன்பு எப்பொழுதும் நம்முடனே இருக்கிறது என்றால், நமது கஸ்டகாலங்களில் எல்லாம் தேவனுடைய ஆறுதல் உண்டு எனில், நாம் அறிக்கையிடும்போதெல்லாம் தேவனுடைய மன்னிப்பு கிடைப்பது நிச்சயம் எனில், நாம் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டும்.

மகிழ்ச்சியாயிரு என்பதற்கான ஆங்கில வார்த்தை Rejoice என்பதை Re (மறுபடியும்) joice (மகிழ்ச்சியாயிரு) என்பதாக நான் நினைக்கிறேன். Re என்பது திரும்பத்திரும்ப செய்வது அல்லது மறுபடியும் செய்வது என்பதைக் குறிக்கிறது என காண்கிறேன். joice என்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்துதலைக் குறிக்கிறது எனக் காண்கிறேன். ஆகவே....

மகிழ்ச்சியாயிருப்பதற்கான காரணத்தை நான் பெற்றனுபவித்த பின்பு, நான் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நான் என் சந்தோசத்தை திரும்பவும் வெளிப்படுத்த வேண்டும். இவ்விதமாக மகிழ்ச்சியானது என் இருதயத்திலும், என் மகிழ்ச்சிக்குக் ஒரகாரணமாக இருக்கக் கூடிய மற்றவர்களின் இருதயங்களிலும் மகிழ்ச்சியானது புதுப்பிக்கப்படுகிறது.

Application பயன்பாடு : திரும்ப திரும்ப மகிழ்ச்சியாயிருப்பதைக் குறித்த ஒரு சிறந்த உண்மை என்னவெனில்: ஒரு காரியத்தைக் குறித்து எத்தனைமுறை மகிழ்ச்சியாயிருப்பது என்கிற வரையறைக்குட்ப்படாதவனாக நான் இருக்கிறேன். நான் விரும்புகிற போதெல்லாம் என்னால் மகிழ்ச்சியாயிருக்க முடியும். ஒருவேளை பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு காரியமாக இருந்தாலும்கூட நான் அதைக் குறித்து திரும்பவும் மகிழ்ச்சியடைய முடியும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குத் தந்திருக்கிற பரிபூரண நன்மையில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஆமென்.


Re + joice

1Kings 15; 2Chronicles 13,14; Philippians 4

Scripture: Philippians 4:4 Rejoice in the Lord always. I will say it again: Rejoice!

Observation: Paul here repeats what he previously wrote in chapter 3. If God’s grace is always there; if God’s love is always with us; if God’s comfort is always available for every time of trouble; if God’s forgiveness is always assured when we confess; then we should ALWAYS rejoice!

I think of rejoice as “re” and “joice.” I see “re” as “repeating” or “doing it again.” I see “joice” as “expressing joy.” So…

After I have experienced the cause for joy, I should re-joice. I should express my joy again. In that way the joy is renewed in my heart, and in the hearts of others who may have been a part of the reason for my joy.

Application: A great thing about “re-joicing:” I am not limited to how many times it is appropriate. I can do it as often as I like—even about things that happened years ago

Prayer: Lord, I rejoice in your abundant goodness to me. Amen.