Scripture வேதவசனம் : 1சாமுவேல் 30:22 அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் மனைவியையும் தன் தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
23. அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
24. இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
Observation கவனித்தல் : தாவீதின் சேனையிலுள்ள மனிதர்கள் அதை தெளிவாகக் கண்டனர். யுத்தத்தின் வேதனையை அவர்கள் அனுபவித்திருந்தனர், ஆகவே யுத்தத்தில் கைப்பற்றியவை அவர்களையே சேர வேண்டும். தாவீதின் கண்ணோட்டம் முற்றிலும் வேறூபட்டிருந்தது. சிறைப்பட்டுப் போன தங்கள் உடைமைகள் மற்றும் குடும்பத்தினரைக் கண்ண்டுபிடிக்கும் பேரதிர்ச்சியில் இருந்து மீள தேவன் அவர்களுக்கு தைரியத்தையும் திடனையும் அளித்திருந்தார். எதிரிகளிடம் வழிநடத்திச் செல்ல ஒருவரை அவர்களுக்கு அளித்திருந்தார். அந்த யுத்தம் அவர்களுடையதல்ல, தேவனுடையது. வெற்றியும் கூட தேவனுடையதுதான். விடாய்த்துப் போனபடியினால் இவர்களுடைய பொருட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி பின் தங்கினவர்களும் யுத்தத்தில் கைப்பற்றியவற்றில் தங்கள் பங்கைப் பெறுவர். நாம் தொடர்ந்து படிக்கும் சில வசனங்களில் தாவீது கொள்ளையுடைமைகளை தனக்கு முன்பு உதவின சகோதரருக்கும் கூட அனுப்பினதை நாம் வாசிக்கிறோம்.
Application பயன்பாடு : எனது உடைமைகளை நான் எனது பிரயாசத்தினால் கிடைத்தவை என்று காண்பேனாகில், நான் அவற்றை பதுக்க கூடும். எனது பலன் ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்கிறபடியால், கூடியமட்டும் நான் அவற்றை எவ்வளவு காலம் நிலைத்திருக்கச் செய்ய முடியுமோ அந்தளவுக்கு அதை நிலக்கச் செய்ய வேண்டும். ஆணால் தாவீதைப் போல அவை தேவனிடத்திலிருந்து வந்தவை என்று நோக்கினால், தேவனது பலன் எல்லைக்கு உட்பட்டது அல்ல, அவை வெறுமையாய்ப் போவதில்லை. அவர் எனக்கு தந்ததில் நான் தாராளமாய் இருக்க முடியும்.
Prayer ஜெபம்: ஆண்டவரே உமது அனேக ஆசீர்வாதங்களுக்காக நன்றி. இன்று நான் நீர் எனக்கு அளித்த ஆசீர்வாதங்களால் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவும். ஆமென்!
1Samuel 30-31; 1Chronicles 10; Matthew 12
A different perspective
Scripture: 1Samuel 30:22 But all the evil men and troublemakers among David’s followers said, "Because they did not go out with us, we will not share with them the plunder we recovered. However, each man may take his wife and children and go."
23 David replied, "No, my brothers, you must not do that with what the LORD has given us. He has protected us and handed over to us the forces that came against us.
24 Who will listen to what you say? The share of the man who stayed with the supplies is to be the same as that of him who went down to the battle. All shall share alike."
Observation: The men in David’s army saw it quite clearly. They had borne the heat of the battle, so the spoils should be theirs. David’s perspective was totally different. God had given them strength and courage to recover from the shock of finding their possessions and families taken captive. God had provided someone to lead them to the enemy. The battle had not been theirs, but God’s. The victory too was God’s. The exhausted ones left behind to guard the supplies would also share in the spoils of the battle. A few verses further we read that David even shared the spoils with many neighboring people who had very likely previously helped him.
Application: How I see the source of my possessions will greatly affect what I do with them. If I see them as the results of my labor, I may tend to hoard them. After all, my strength is limited and I must be careful to make them last as long as possible. However, if like David, my perspective I that they are from God; He is not limited! His resources never are exhausted! I can be generous with what He has given me.
Prayer: Lord, thank you for your many blessings. Today, may I bless others with the blessings you have given me. Amen.
No comments:
Post a Comment