Saturday, June 18, 2011

SOAP 4 Today - என் பேச்சு எவ்விதம் உள்ளது?

வாசிக்க: 1இராஜாக்கள் 22; 2நாளாகமம் 18,19, கொலோசெயர் 4

Scripture வேத வசனம்:

கொலோசெயர் 4:6. அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.

Observation கவனித்தல் : ஒருவன் கிறிஸ்தவனாக மாறும்போது, அவனுடைய வாழ்வில் மாற்றப்படவேண்டிய பகுதிகள் அனேகம் உண்டு. மாற்றம் நிகழவேண்டிய முக்கியமான பகுதிகளுல் ஒன்று அவனுடைய உரையாடல் ஆகும். அவர்களுடைய வார்த்தைகளில் உள்ள கடினத்தன்மை மற்றும் எவரையும் குறைதீர்க்கும் தன்மை ஆகியவற்றிற்குப் பதிலாக கிருபையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் வெளிப்பட ஆரம்பிப்பதை மற்றவர்கள் காண ஆரம்பிப்பர். கிருபையுள்ள வார்த்தைகள் உப்பைப் போல சுவையூட்டுவதாக உள்ளன. கிறிஸ்தவர்களிடம் இருப்பதைப் பெறுவதற்கான தாகத்தை அது மற்றவர்களிடம் உண்டாக்கும். ஒருவேளை அவர்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியாவிடினும் கூட, அவைகளுக்கு கிருபையுள்ள வார்த்தைகளால் பதிலளிக்க முடியும்.

Application பயன்பாடு : "எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்” (லூக்கா 4:22) என்று இயேசுகிறிஸ்துவைப் பற்றி கூறப்பட்டுள்ளது. எனது பேச்சின் இயல்பும் அவ்வாறே மாறட்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்மைப் போல அதிகமாக மாற்றும். இன்று என் வாயில் கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டு வருவதாக. ஆமென்!

How’s my talking?

1Kings 22; 2Chronicles 18,19; Colossians 4

Scripture: Colossians 4:6 Let your conversation be always full of grace, seasoned with salt, so that you may know how to answer everyone.

Observation: There are many areas of change that come into a person’s life when they become a Christian. One of the major areas has to do with their conversation. Others will begin to notice that harshness and condemnation in their words begin to be replaced with grace and acceptance. Like salt, their gracious words will have a good flavor and leave a good taste. It will make people thirsty for what they have. They may not know all the answers, but they will know how to answer everyone—with grace.

Application: Of Jesus it was said, “All spoke well of him and were amazed at the gracious words that came from his lips.” (Luke 4:22) May that become a characteristic of my conversation also.

Prayer: Lord, make me more like you. Let gracious words come from my mouth today. Amen.


No comments:

Post a Comment