Scripture வேதவசனம்: 1தீமோத்தேயு 5:1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,
2. முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.
Observation கவனித்தல் : ஒரு இளம் போதகருக்கு எழுதப்பட்ட மேலே சொல்லப்பட்ட வசனங்கள் எல்லாரும் வாசிக்கக் கூடியதாக உள்ளது. விசுவாசிகளுகு ஒரு வேதாகமம், தலைவர்களுக்கு ஒருவேதாகமம் என தனித்தனியாக கொடுக்கவில்லை. விசுவாசிகளும் சபைத் தலைவர்களும் ஒரே வேதாகமத்தை வாசித்து, ஒரே ஆவியை உடைய்வர்களாக இருக்கிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களுக்கு நாம் பொறுப்பாளிகளாகவும் மற்றும் தலைவர்களாக நாம் அனைவருமே தாக்கத்தை உண்டாக்கக் கூடியவர்களாக இருக்கிறோம் என்பதற்காகவுமே தேவன் நமக்கு ஒரே வேதாகமத்தையும் ஆவியையும் தந்திருக்கிறார் என நான் விசுவாசிக்கிறேன்.
தலைவர்கள் வளர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனால் பூரணர் ஆக இருக்கிறார் என்பதற்காக ஒருவர் தலைவர் ஆவதில்லை. அவர்கள் தவறு செய்யக்கூடும், அவர்களை நாம் மன்னிக்கவேண்டும். எனினும், யாரைப் பின்பற்றவேண்டும், யாரைப் பின்பற்றக் கூடாது என்பதை அறிந்துகொள்ளுமளவுக்கு தேவனுடையை வார்த்தையை விசுவாசிகள் அறிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட விசுவாசிகள் வேதாகமத்துக்குப் புறம்பான தலைவர்களைப் பின் தொடர மாட்டார்கள்.
நாம் நடமாடிக் கொண்டிருக்கிற இதே பூமியில்தான் இயேசு கிறிஸ்து 33 வருடங்களாக சுற்றித் திரிந்தார். வேதாகமத்தை (குறிப்பாக நற்செய்தி நூல்களை) வாசித்து, இயேசுவை அறிந்து கொள்ளவும், இயேசுவைப் போல வாழவும் மற்றும் இயேசுவைப் போல சிறப்பாக வாழ்கிற தலைவர்களை கண்டுகொள்ளவும் உதவும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்.
Application பயன்பாடு: ஒரு பின்பற்றுகிறவராகவும் மற்றும் ஒரு தலைவராகவும் எனக்கு பொறுப்பு உண்டு. நான் யாரைப் பின்பற்றுகிறேன், எப்படி பின்பற்றுகிறேன் என்பதைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
Prayer ஜெபம்: பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவை நீர் என்னில் காணுமளவுக்கு நான் உம்மைப் பின்பற்றுகிறவனாக என்னை மாற்றும். உம்முடைய குமாரனாகிய இயேசுவைப் போல முன் சென்று வழிநடத்தும் தலைவராக என்னை மாற்றும். ஆமென்.
2Kings 10; 2Chronicles 22,23; 1Timothy 5
Scripture: 1Timothy 5:1 Do not rebuke an older man harshly, but exhort him as if he were your father. Treat younger men as brothers,
2 older women as mothers, and younger women as sisters, with absolute purity.
Observation: The above verses written to a young pastor are available for everyone to read. God has not provided one Bible for the believer and another Bible for the leaders. Believers and church leaders both read the same Bible and both have the same Holy Spirit! I believe that is because we are responsible for whom we follow and we all have areas of influence as leaders.
Leaders should be mature, but they do not become leaders because they are perfect. They will make mistakes and need forgiving. However believers should come to know the Word enough to recognize which leaders should be followed and which leaders should not be followed. Oh that believers would stop following un-scriptural leaders.
For thirty three years Jesus walked on the same earth we walk. Read the Bible (especially the Gospels) and ask the Holy Spirit to help you get to know Jesus, to walk like Jesus, and to find leaders who best walk like Jesus.
Application: I am responsible as a follower and as a leader. I need to be careful about who I follow and how I lead.
Prayer: Father, make me a follower in whom you can see your Son, Jesus. Make me a leader who leads like your Son, Jesus. Amen.
No comments:
Post a Comment