“…exact representation…”
Scripture வேதவசனம்: எபிரேயர் 1:1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். 3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
Observation கவனித்தல்: தேவனது தன்மையாக வேதாகமத்தின் முதல் அதிகாரத்திலேயே வெளிப்படுத்தபடும் முதலாவது காரியம் அவர் பேசுகிறவர் என்பதே. தேவன் ஒரு பேச்சாளர். அவர் பேசுகிறார். அவர் நம்மிடம் பல வழிகளில் பேசியிருக்கிறார். ஆனால் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே மிகவும் சிறப்பாக நம்மிடம் பேசியிருக்கிறார். யோவான் முதல் அதிகாரத்தில் , மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தையாக தேவனுடைய மிகவும் சிறந்த மற்றும் தெளிவான செய்தியாளராக இயேசு இருக்கிறார்.
Application பயன்பாடு:இயேசுவை அறிந்து கொள்வதில் எனக்குள்ள் அர்ப்பணிப்பில் தேவனை அறிந்துகொள்வதற்கான என் விருப்பத்தை காண முடியும். என்னால் இயன்ற மட்டும், நான் இயேசுவை குறித்த சிறப்பான அறிவு பெற்றவனாகவேண்டும். “ என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று இயேசு சொன்னார். பிதாவனவர் பேசவேண்டும் என்று சொல்லுகிறவைகளையே தாம் பேசினதாக இயேசு கூறினார். அவர் செய்த கிரியைகள் பிதாவின் கிரியைகள் ஆகும். இயேசு பிதாவை முழுவதுமாக் பிரதிபலிக்கும் “தன்மையின் சொரூபமாக” இருந்தார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை அறிந்துகொள்கையில் பிதாவை அதிகமாக அறிந்து கொள்ளட்டும். மற்ற மனிதர்கள் என்னை அறிந்துகொள்ளும்போது உம்மை அறிந்து கொள்ளும்படிச் செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment