Friday, July 8, 2011

SOAP 4 Today - நமக்கு முன்னோடினவராகிய இயேசு

வாசிக்க: மீகா 1- 4; எபிரேயர் 6.

Scripture வேதவசனம்: எபிரேயர் 6:19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
20.ச்மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

Observation கவனித்தல்: இயேசுவை நமக்கு முன்னோடினவர் என்று வேதாகமம் குறிப்பிடுகிறது. இயேசு சிலுவையில் சிந்திய தம் தியக ப்லியின் இரத்தத்துடன் ஒரு ஆசாரியராக பரலோகத்துக்குள் பிரவேசித்திருக்கிறதை இவ்வசனம் குறிப்பிடுகிறது. ஆனால் வேதாகமத்தில் பல இடங்களில் இயேசுவை ‘முன்னோடி” யாக நாம் காணலாம்.

Application பயன்பாடு: பல வேளைகளில் எனக்கு ‘ஒரு முன்னோடி’ ஆக இருந்திருக்கிறார். அவர் சென்றடையாத ஒரு இடத்திற்கு என்னை அவர் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை அனுப்புகிறார். நான் போகும்போது என்னுடனே கூட வருகிறார். நான் வந்து சேரும்போது அங்கே எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, எனக்கு முன் செல்வதற்காக உமக்கு நன்றி. எனக்கு முன் இருப்பதை நீர் அறிந்திருக்கிறீர். ஏனெனில் நான் சென்று கொண்டிருக்கிற வழியில் நீர் முன்னமே இருந்திருக்கிறீர். ஆமென்.!

No comments:

Post a Comment