Thursday, July 14, 2011

நிலையானது

வாசிக்க: ஏசாயா 19-21; எபிரேயர் 11

Scripture வேதவசனம்: எபிய்ரேயர் 11:39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

Observation: அவர்கள் எல்லாரும் விசுவாசத்தைக் குறித்து நற்சாட்சி பெற்றார்ஜ, ஆயினும் நீங்கள் இந்த அதிகாரத்தை முழுமையாக வாசிப்பீர்கள் எனில், மிகப்பெரும் வெற்றியை ருசித்தவர்கள் கூட வாக்குப்பண்ணபட்டதை அடையவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். மிகக் கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்கள் அதைப் பெறத் தவறவில்லை. அவர்கள் எல்லாரும் எதிர்நோக்கிப்பார்க்கும் படியான ஒரு காரியம் இருந்து கொண்டிருந்தது.

சிலரின் திருமண வாக்குகளைப் போல, சிலரின் விசுவாசமும் குறுகிய காலமே செல்லுபடியாகிறதாக இருக்கிறது. மரணம் மட்டும் அவை நிலைத்து நிற்பதில்லை.

Application பயன்பாடு: நான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதற்குத் தகுதியான ஒன்றை தேவன் எனக்கு வைத்திருக்கிறார். இந்த வசனத்தை நான் இவ்விதமாகப் புரிந்து கொள்கிறேன், மரணத்தில் எனக்கு முன்பு மரித்தவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பூரணத்தை அனுபவிக்க நாம் எல்லாரும் அங்கு சென்று சேரும்வரைக்கும் காத்திருக்கவேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உண்மையுள்ளவனாக இருக்க உதவும், ஆண்டவராகிய இயேசுவே உண்மையுள்ளவனாக இருக்கச் செய்யும். நான் ஓடவேண்டிய ஓட்டப்பந்தயங்கள் உண்டு, பெறவேண்டிய வெற்றிகள் உண்டு. ஒவ்வொரு நிமிடமும் உண்மையுள்ளவனாக இருக்க உதவும். ஆமென்.


No comments:

Post a Comment