Friday, July 15, 2011

அவர் பாத்திரர்

வாசிக்க: ஏசாயா 22-24; எபிரேயர் 12

Scripture வேதவசனம் : எபிரேயர் 12:4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

Observation கவனித்தல் : என் இரட்சிப்புக்காக இயேசு செய்துமுடித்ததில் உள்ள என் விசுவாசமானது, நான் பரிசுத்தமாகவும் மற்றவர்களுடன் சமாதானமாக வாழ்வதற்கும் எடுக்க வேண்டியது என் பொறுப்பு அல்ல என்று சொல்ல முடியாது. என் நீதிக்காக தேவன் வைத்திருக்கும் ஆசீர்வாதத்தை நம்புவது நான் பாவத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க விடுவதில்லை. நான் சோதனையை எதிர்த்து நிற்கவேண்டும். உபத்திரவப்படுத்தப்படும்போது உண்மையாக நிற்பதையோ அல்லது எதிரி என் வழியில் கொண்டுவருகிற சோதனையை எதிர்த்து நிற்பதையோ இது குறிக்கலாம்.

Application பயன்பாடு: என் பரமதக்ப்பன் தம் வாழ்க்கையின் மூலமாக நிரூபித்திருப்பதால், இயேசுவுக்காக வாழ்வது என்பது எளிதானது அல்ல என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இந்தப் போராட்டம் போராடத் தகுதியானதுதான். என்னை அழிக்க முழு மூச்சுடன் ஒரு எதிரி செயல்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதைக் கண்டு நான் ஆச்சரியபடக் கூடாது. நான் பாவத்தைக் குறித்து அது மிகவும் ஆபத்தானது என்று எனக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இயேசுவை நாள்முழுதும் துதித்துக் கொண்டு, அவர் மீது என் கவனத்தை வைத்திருப்பது நான் சந்திக்கிற போராட்டங்களை சரியான கண்ணோட்டத்தில் வைக்க உதவுகிறது.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காகச் செய்த தியாகமானது நான் உமக்காகச் செய்ய நினைக்கும் எந்த தியாகத்தையும் விட மேலானது. நீர் பாத்திரர். ஆமென்.


No comments:

Post a Comment