Scripture வேதவசனம்: ஏசாயா 25:1. கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
Observation கவனித்தல்: தேவன் மட்டுமே செய்யக் கூடியவைகளையே தேவன் செய்கிறார். அவரின் கிரியைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். சத்தியமும் உறுதியுமானவைகளைச் செய்ய அபரிதமான புரிதலும் அளவற்ற ஆற்றலும் தேவை. தேவன் இவ்விரண்டையும் உடையவராக இருக்கிறார்.
Application பயன்பாடு: இவ்வளவு ஆச்சரியமான தேவனை என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களை நான் அறிந்துகொள்ளச் செய்வேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நாளையதினத்தைக் குறித்தவைகளை, நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் காலங்கள் உம் கரத்தில் இருக்கிறது என்பதையும், நான் உம் கரத்தில் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment