Thursday, July 28, 2011

மரணம்

வாசிக்க: ஏசாயா 57-59; சங்கீதம் 103; 2 பேதுரு 3.

Scripture வேதவசனம்: ஏசாயா 57:1. நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.

2. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

Observation கவனித்தல்: தீங்கு காலங்களை அனுபவிக்கிறதற்கு முன்பு தேவன் நீதிமானை எடுத்துக்கொள்கிறார். இது அவர்களைத் தப்பப் பண்ணும்படிக்கான தேவனுடைய செயல் ஆகும். அவர்கள் சிறந்த ஒரு இடத்திற்குத்தானே செல்லப் போகிறார்கள். இந்த தேகத்தை விட்டு நீங்குவது நலமானதாக இருக்கும் என்று பவுல் கூறினார்.

மேலே உள்ளதில் இரண்டாவது வசனம் மரணத்தைக் குறித்து இரண்டு சிறப்பான வார்த்தைகளைக் கூறுகிறது. முதலாவது “ சமாதானம்” போராட்டம் ஓய்ந்து விடுகிறது. இரண்டாவதாக, ”இளைப்பாறுதல் உண்டாகிறது. வாழ்க்கையில் வருத்தங்கள் முடிந்துவிடுகிறது.

Application பயன்பாடு: ” நாம் எல்லாரும் பரலோகம் செல்லும்போது, அது எவ்வளவு சிறப்பான நாளாக இருக்கும், நாம் எல்லாரும் இயேசுவைக் காணும்போது, வெற்றியை முழக்கமாகப் பாடுவோம்” என்ற பாடலை நான் அடிக்கடிப் பாடுவதுண்டு. களிகூர்வதற்கு எனக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இடத்திற்கு வந்து சேருமட்டும் நான் காத்திருக்கவேண்டியதில்லை என்பதனால் மகிழ்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, பிதாவின் வீட்டில் எனக்காக ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போவதாக நீர் சொல்லியிருக்கிறீர். இதைப் பற்றிய எண்ணமே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமென்

No comments:

Post a Comment