வாசிக்க: 2இராஜாக்கள் 21; 2நாளாகமம் 33; யோவான் 4
Scripture வேதவசனம்: 2நாளாகமம் 33: 12 இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். 13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
Observation கவனித்தல்: வேதாகமத்தில் காணப்படும் கிருபையின் மிகப்பெரிய உதாரணங்களில் ஒன்றை நாம் இங்கே காண்கிறோம்.
இது மிகவும் ஆச்சரியமானது. தேவனை விட்டு மிகவும் விலகிப் போன யூதா ராஜாவின் ஜெபத்திற்கு தேவன் பதில் அளித்தார். தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவங்களினிமித்தம் அவர் சிதறப்பண்ணின யூதாவைச் சுறிலும் இருந்த நாட்டு மக்களை விட அதிகமாக தன் மக்கள் தேவனை விட்டு விலகும்படி யூத இராஜா வழிவிலகச் செய்தான். இது தேவன் சிறைப்படுத்தலுக்குட்படுத்தின ஒரு இராஜாவின் ஜெபம் ஆகும். மிகவும் ஆச்சரியப்படும் விதத்தில், அவனுடைய ஜெபம் தேவனுடைய இருதயத்தைத் தொட்டது. தேவன் அவனை விடுவித்தார்.
Application பயன்பாடு: கிறிஸ்தவ தேசங்கள் மனாசே போல மனம்திரும்பி ஜெபம் பண்ண வேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய இருதயத்தைச் சேரும் ஜெபங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. தேவன் பதில் தர விரும்புகிற ஜெபங்களை நாம் செய்யவேண்டும். நம்மை வேதனைப்படுத்தும் பிரச்சனைகளுக்குகான பதில்கள் தேவனால் மாத்திரமே தீர்த்துவ் வைக்கப்பட முடியும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, கிறிஸ்தவ உலகங்களின் பணதைப் பார்க்கிலும், மனம் திரும்பி தங்கள் பிதாக்களின் தேவனிடம் எப்படி திரும்புவது என்பதை அறிந்திருக்கும் முன்மாதிரியான கிறிஸ்தவ தேசமே இன்றைய உலகத்திற்கு தேவை. ஆமென்.
No comments:
Post a Comment