The Stranger On The Shore
Scripture வேதவசனம்: யோவான் 21:10 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
Observation கவனித்தல்: இந்த வசனத்தின் காணப்படுகிற முரண் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. சீடர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டனர். அவர்களைப் பொறுத்தவரையில் இயேசு கடறகரையில் நிற்கும் ஒரு அன்னியர். அவர்கள் மீன் பிடிப்பு எப்படி என்பதை விசாரிக்கும்படி அவர் அவர்களை அழைத்தார். அவர்கள் ஒன்றும் பிடிபடவில்லை என்றனர். வலையைப் படகின் மறுபுறம் போடும்படி இயேசு சொன்னார். அவர்கள் அவ்வாறு செய்தபோது, வலை மீன்களால் நிறைந்து வலையை கரைக்கு இழுத்துக் கொண்டு வரும்படி ஆயிற்று. நீங்கள் பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்று இயேசு அவர்களிடம் கூறினார். உண்மை என்னவெனில், அவர்கள் ஒன்றையும் பிடிக்கவில்லை. இயேசுவின் சத்தத்தைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படியும் வரையிலும் அவர்கள் வலை நிரப்பப்படவில்லை.
Application பயன்பாடு: ”ஆவிக்குரிய” காரியங்களுக்கு மட்டும் என நான் இயேசுவை மட்டுபடுத்திவிடக் கூடாது. அவர் மீன்பிடித்தலில், பேரூந்து ஓட்டுவதில், என் கல்வியில், என் காசோலையில் என் அலுவலக வாழ்க்கையில் அல்லது என் வாழ்க்கையைக் குறித்த எந்தக் காரியத்திலும் அவரால் பேசமுடியும். நான் அவருக்கு செவிகொடுத்து உடனடியாக கீழ்ப்படியவேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, கடற்கரையில் அன்று அன்னியராக இருந்தீர். நீர் யார் மூலமாகவாவது என்னுடன் பேசக் கூடும். உம் வார்த்தையைக் கேட்டு உடனே கீழ்படிய விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment