Scripture வேதவசனம் : லூக்கா 2:49 நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா? .
Observation கவனித்தல்: மரியாளையும் யோசேப்பையும் பொறுத்தவரையில், இயேசுவை அவர்கள் தொலைந்துபோனவர். மூன்று நாட்களாக அவர்கள் எருசலேமின் தெருக்களில் அவரைத் தேடி அலைந்தனர். அதன்பின்னரே அவர் தேவாலயத்தில் மதத்தலைவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.
இயேசு பேசின முதல் வார்த்தையாக இது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இயேசுவின் வாழ்க்கையின் முன்னுரிமை ஆகிய பிதாவாகிய தேவனைக் குறித்த வார்த்தைகளாக அவை இருந்தது எவ்வளவு பொருத்தமானது. இவ்வார்த்தைகள் இயேசுவின் பிந்திய வாழ்க்கைக்கான பாதையை அமைத்துக் கொடுத்தன. நற்செய்தி நூல்களில் பிற பகுதிகளில் பிதாவின் சித்தத்தைச் செய்யும்படிக்கு தாம் அனுப்பப்பட்டதாகவும், பிதாவின் வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று இயேசு கூறுவதாக நாம் வாசிக்கிறோம். அவ்ர் தப் பிதாவின் வேலையைச் செய்யும்படிக்கு இவ்வுலகில் இருந்தார்.
Application பயன்பாடு: நான் இந்த உலகில் ஒரு நோக்கத்துக்காகவே வைக்கப்பட்டிருக்கிறேன். நான் வாழ்கிற மற்றும் பேசுகிற விததில் என் பரலோகப் பிதாவை நான் பிரதிபலிக்கிறேன். எனக்கு உதவும்படி எனக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு நான் உமது நல்ல பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன். ஆமென்.
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி
ReplyDelete