Thursday, October 6, 2011

Soap 4 Today - கேள்விகள்

வாசிக்க வேண்டிய வேதபகுதி: எஸ்றா 7-8; லூக்கா 20.

Scripture வேதவசனம்: லூக்கா 20:2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
22. இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
33 இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.

Observation கவனித்தல்: இந்த அத்தியாயம் நான்கு முக்கியமான கேள்விகளை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது. மூன்று கேள்விகள் இயேசுவைக் குறித்து மதத்தலைவர்கள் கேட்டவை ஆகும். முதலாவதாக, இயேசு செய்துகொண்டிருந்த ஊழியத்தின் வல்லமையை எங்கிருந்துப் பெற்றார் என்பதைக் குறித்துக் கேட்டார்கள். இரண்டாவதாக, ராயனுக்கு வரி கொடுப்பதைக் குறித்துக் கேட்டனர். கடைசியாக, குழந்தைப் பேறு பெறுவதற்கு முன்பே கணவன் மரித்ததினால் ஏழு பேரை மணந்தாக கருதப்படும் ஒரு பெண்ணைக் குறித்து கேட்டார்கள். அவள் பரலோகத்தில் யாருக்கு மனைவி ஆக இருப்பாள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

பின்பு இயேசு நான்காவது கேள்வியைக் கேட்டார்: “ தாவீது தன்னை ஆண்டவன் என்று சொல்லியிருக்க அவர் எப்படி தாவீதின் குமாரனாக இருக்க முடியும்?” இயேசு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆனால் இயேசுவின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

ஆதாமும் ஏவாளும் கூட தங்களிடத்தில் ” நீ எங்கே இருக்கிறாய்?” எனதேவன் கேட்ட முதலாவது கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை,

Application பயன்பாடு: இயேசு என்னிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்கிறார் எனில், அவருக்குப் பதில் தெரியாததினால் என்னிடம் கேட்கவில்லை. அந்தக் கேள்வி எனது பிரயோஜனத்துக்காகவே கேட்கப்படுகிறது. நான் கற்றுக் கொள்ள அல்லது பாவத்தை அறிக்கையிட அவர் முயற்சிக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் கேள்விகளுக்கு விலகி ஓடாமல் இருக்க உதவும். ஆமென்.

No comments:

Post a Comment