Scripture வேதவசனம்: 2 கொரிந்தியர் 7:10. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
Observation கவனித்தல்: தேவனுக்கேற்ற துக்கத்திற்கும் உலகப்பிரகாரமான துக்கத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். தவறாகச் செய்த ஒரு செயலைக் குறித்து உணர்த்தப்படுவது தேவனுக்கேற்ற துக்கம் ஆகும். இது தவறை ஒப்புக் கொள்ள வழிநடத்துகிறது, தேவைப்பட்டால் திருத்திக்கொள்ளவும் மன்னிப்பைப் பெறவும் வழிவகை செய்கிறது. ஆனால் உலகப் பிரகாரமான துக்கமானது, தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்டோமே என்று வருத்தப்படுவது ஆகும். தவறாகச் செய்த செயலை ஒப்புக்கொள்ளுதல் என்பது மிகவும் அரிதாகவே உலகப் பிரகாரமான துக்கத்தில் காணப்படுகிறது. மற்றவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகள் நின்ற பின், திரும்பவும் தவறுகள் நிகழாவண்ணம் முன் ஏற்பாடுகள் செய்யப்படுவது இல்லை.
Application பயன்பாடு: நான் என் பாவங்களைக் குறித்து உண்மையான துக்கமடையவேண்டும் என்றும் உடனடியாக மனம் திரும்பவேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். பாவம் செய்வதை நிறுத்த எடுக்கத் தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்குமளவுக்கு நான் வருத்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவருடைய மனிப்பைப் பெற்று, தகப்பனால் மிகவும் நேசிக்கப்பட்டு வாழும் ஒரு குழந்தையைப் போல நான் வாழவேண்டும் என்று விரும்புகிறார். அக்குழந்தையின் தகப்பன் மீதான அன்பு நன்கு அறியப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டு மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நீர் பாவத்தைக் காண்பது போலவே நானும் காண உதவும். நான் மன்னிக்கப்படுவதற்காக நீர் எவ்வளவு பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தியிருக்கிறீர். ஆமென்!
No comments:
Post a Comment