Scripture வேதவசனம்: மத்தேயு 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Observation கவனித்தல்: மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இவை கடைசி வசனஙகள் ஆகும். இயேசு இவ்வுலகை விட்டு கடந்து போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். தனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆகையால் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கும் படிக் கட்டளை கொடுத்தார். அதன் பின்பு, “நான் வருவேன் என்றோ நான் திரும்பவும் வருவேன் என்றோ அல்லது நாம் திரும்பவும் இந்த இடத்தில் சந்திப்போம் என்றோ அவர் சொல்லவில்லை. நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றே சொன்னார்.
Application: பரலோகத்திற்கு ஏறிச் செல்லுகிற நாள் வரைக்கும் ஒரு மனிதனாக இந்த பூமியில் உலாவியவர் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தின் மூலமாக என்னுடனே இருக்கிறார். 24 மணி நேரமும், நான் எங்கிருந்தாலும் என்னுடன் இருக்கிறார். அவ்ர் என் ஞானமாகவும் பெலன் ஆகவும் இருக்கிறார். சங்கீதக்காரனைப் போல நானும் சொல்ல முடியும், “பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” (சங்கீதம் 23:4)
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம்முடனே இணைந்திருக்க வேண்டிய பொறுப்பை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இவ்வசனங்களில் நீர் என்னுடன் இணைந்து இருப்பதாக வாக்குப் பண்ணியிருக்கிறீர் (நீதிமொழிகள் 18:24). நன்றி! நன்றி நன்றி! ஆமென்.
No comments:
Post a Comment