Scripture வேதவசனம்: ரோமர் 5: 7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
Observation கவனித்தல்: மிகவும் ஆச்சரியமான சிந்தனை. உலகமெங்கிலும், தங்கள் கடவுள்களைத் திருப்திப்படுத்தவேண்டும் என்று பக்தர்கள் பலிகளைச் செலுத்துகிறார்கள். ஆனால் நம் தேவன் மிகவும் உன்னதமான பலியை தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்காகச் செய்கிறார். அவர் நமக்காகச் செய்த பலியைக் காட்டிலும் மேன்மையான பலியை நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.
Application பயன்பாடு : தேவன் மனப்பூர்வமாக எனக்காகச் செலுத்தின பலியைக் காட்டிலும் அதிகமான என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர் எனக்ககச் செய்த படியால், அவர் என்னிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார் என நான் ஒருபோதும் குறைகூறக் கூடாது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்முடையவன். என் வாழ்க்கை உமக்குச் சொந்தமானது. நான் இன்று உமக்காக என்ன செய்ய முடியும். ஆமென்.
No comments:
Post a Comment