Thursday, December 1, 2011

SOAP 4 Today - ஆர்வம்

Scripture வேதவசனம்: ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

Observation கவனித்தல்: இளம் மாணவர் ஒருவர் விளையாட்டுக் குழு ஒன்றில் இணைவதைப் பார்த்தேன். அவர்கள் பொதுவாக மிகவும் சோர்வாகவே முன்பு நடந்து வருவார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் காலையிலேயே எழுந்து பயிற்சிக்கு வர ஆயத்தமாக இருந்தனர். பள்ளியில் சில கட்டிடங்களைக் கடந்து செல்வதற்கு முணுமுணுப்பவர்கள் இப்போது பயிற்சி வேளையில் மைதானத்தை 6-10 தடவை சுற்றி ஓடி வருவதற்கு ஆயத்தமாக இருந்தனர். அவர்கள் குழுவில் இருப்பதைக் குறித்து மிகவும் சந்தோசமடைந்து காணப்பட்டனர்.

Application பயன்பாடு: என் ஆர்வம் எல்லாரும் காணப்படும்படி வெளிப்படையாக இருக்க வேண்டும். கர்த்தரைச் சேவிப்பதைக் குறித்து நான் மிகவும் உற்சாகமுடன் இருக்க வேண்டும். கர்த்தரைச் சேவிப்பது எனக்கு மிகவும் பிரியமானதாக இருக்கிறது என் பது வெளிப்படையாக இருக்க வேண்டும். நான் அவருடைய குழுவில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, என்னை உமது குழுவின் இருக்கும்படி நீர் தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. உம்முடன் சேர்ந்து நான் அடையாளம் காணப்படுவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆமென்.

No comments:

Post a Comment