Monday, December 5, 2011

SOAP 4 Today - நம்பிக்கை

Scripture வேதவசனம்: ரோமர் 15: 13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Observation கவனித்தல்: நமக்கு உதவக் கூடியவர்களின் விருப்பம், திறமை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நம் நம்பிக்கையின் பெரும்பகுதி அமைந்திருன்க்கின்றது. ஒரு அவசர அறுவை சிகிச்சை நடக்கும் நேரத்தில் நர்ஸ் வந்து அந்த மருத்துவர் இது போன்ற நூற்றுக்கணக்கான சிகிச்சைகளை செய்திருக்கிறார், இதில் நிபுணர் என்று சொல்லும் போது நாம் அதிக நம்பிக்கையுடன் காணப்படுகிறோம்.

Application பயன்பாடு: நம்பிக்கையின் தேவனுடைய விருப்பம் மற்றும் வல்லமை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் நம்பிக்கைக் கொண்டிருந்தால், நாம் நம் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது. நான் தொடர்ந்து அவரை நம்பி, ”தேவன் மற்றவர்களுக்குச் செய்யும் அதிசயத்தை எனக்கும் செய்வார், இதில் இரகசியம் ஒன்றும் இல்லை. தம் கரங்களை எனக்கு நேராக விரித்து அன்பினால் அணைத்து மன்னிப்பார்” என்று நான் பாட வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குச் செய்தவைகளை நான் மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களின் நம்பிக்கையை வளர்க்க உதவும். ஆமென் .

No comments:

Post a Comment