Tuesday, January 3, 2012

SOAP 4 Today - தொடர்ந்து நடைபெறவேண்டிய ஒரு செயல்


Scripture வேதவசனம்
: லூக்கா.3:21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;

22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.


Observation கவனித்தல்: இயேசு தன் பெற்றோருடன் எருசலேம் தேவாலயத்துக்கு போன போது அவருக்கு 12 வயதாக இருந்தது. திரும்பி வருகையில் அவர் காணாமல் போனதை அவர்கள் கண்டு, தேவாலயத்தில் மத தலைவர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கையில் அவரைக் கண்டு பிடித்தனர். இப்போது இயேசுவுக்கு 30 வயது. 18 வருட முதிர்ச்சியும், ஊழிய ஆயத்தமும் யோசேப்பு மரியாள் அவர்களின் வீட்டிலும் மற்றும் தச்சுப் பட்டறையிலும் அவருக்கிருந்தது.


Application பயன்பாடு: முதிர்ச்சி பெறுவது என்பது உடனடியாக நடந்து விடுவதில்லை. அதற்கு நேரம் தேவை. ஒவ்வொருநாளும் எவ்வளவு முதிர்ச்சி ஏற்ப்படுகிறது என்பதைக் கணக்கிடுவது கடினமானது. வளர்ச்சி என்பது மெதுவானதாகவும் சின்ன சின்ன படிநிலைகளிலும் நடைபெறுகிறது. பெரும்பாலும் அவை அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ஆகவே தேறின நண்பர்களுடன் பழகுவதன் மூலமாகவும் அவர்களைக் கவனிப்பதன் மூலமாகவும் செய்யப்படவேண்டும். இந்தச் செயல் முக்கியமானதல்ல என்று கவனிக்காமல் விட்டுவிடப்படக் கூடாது. இது அனேக பலன்களை அளிக்கிறது.


Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்காக வாழ்வது என்பது கேள்விகளைக் கேட்டு, மற்றவர்களின் அனுதின வாழ்வை கவனிப்பதன் முலமாக நான் கற்றுக்கொள்ளும் அனுதினப் பிரயாணம் ஆகும். ஆமென்.

No comments:

Post a Comment