Tuesday, January 3, 2012

SOAP 4 Today - பெலனடைதல்


Scripture வேதவசனம்
: லூக்கா 4:14 Luke 4:14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

Observation கவனித்தல்: லூக்கா முதல் மூன்று அதிகாரங்களில் இயேசு பரிசுத்த ஆவியினால் உற்பவித்ததையும், பரிசுத்த ஆவியினால் வாழ்த்தப்படுவதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப் படுவதையும் மற்றும் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுவதையும் நாம் வாசிக்கிறோம். சாத்தானால் சோதிக்கப்பட்டப் பின்பே இயேசு ஆவியானவரின் பலத்தினால் திரும்பினார் என்று நாம் வாசிக்கிறோம்.

Application பயன்பாடு: தசைகளுக்கு அதிக எடையைக் கொடுத்து கொடுக்கப்படும் பயிற்சி அத்தசைகளை வலுப்படுத்துகிறது. அதே போல பிசாசினால் உண்டாகும் எதிர்ப்புகளும் சோதனைகளும் என் ஆவிக்குரிய பலத்திற்கு பயன்பட முடியும். இதற்காகவே யாக்கோபு பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது மகிழ்ச்சி அடையவேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்காக வாழ்வது என்பது பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வது அல்ல, நீர் என்னுடன் இருக்கிறீர், என் வாழ்வின் பிரச்சனைகளை என் நன்மைக்கேதுவாக மாற்றுகிறீர் என்று விசுவாசித்து வாழ்வதே உமக்காக வாழ்வது ஆகும். நான் அவ்வாறு வாழ உதவும். ஆமென்.

No comments:

Post a Comment