Scripture வேதவசனம்: எண்ணாகமம்15:1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,
3. விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,
Observation கவனித்தல்: இஸ்ரவேலர்கள் தேவனை விசுவாசிகாதவர்களாக இருந்தனர். எகிப்திலிருந்து ஏராளமான அற்புதங்களச் செய்து விடுவித்து ஒரு ஆண்டுகள் ஆவதற்குள், தேவன் தங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தில் வசிப்பவர்களை தோற்கடிக்க வல்லவர் என்பதை விசுவாசிக்க மறுத்தனர். ஆகவே தேவன் அவர்களை திரும்ப்வும் வனாந்திரத்திற்கு அனுப்பினார். ஆனால் அதன்பின்பு அவர்கள் தாங்களாகவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போவது நல்லது என்று எண்ணி புறப்பட்ட போது, அவர்கள் தோற்று பின் வாங்கினர்.
எனவே, தேவனின் அடுத்த நடவடிக்கை என்ன? அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் எப்போது பிரவேசிக்க வேண்டும் என்பதைக் குறித்த வழிநடத்துதலை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவர் தம் திட்டத்தைக் கைவிட்டு விடவில்லை. அத்திட்டம் தொடர்ந்து அவருடைய சித்தத்தில் இருந்தது. அவர்கள் இன்னமும் அவருடைய ஜனங்களாகவே இருந்தார்கள். அவர்கள் செய்யவேண்டிய வேலையைக் கொடுத்ததின் மூலமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்த கனவை அவர் தொடர்ந்து அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் பிரவேசித்தால் என்று அவர் சொல்லாமல், பிரவேசிக்கும்போது என்று அவர் சொன்னார்.
இந்த இடம் இஸ்ரவேலருக்குச் சொந்தமானதாக இருக்கும் என்று ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். தேவன் கொடுப்பதைப் பெறுவதற்கான விசுவாசத்தை உடைய்வர்களாக ஒருதலைமுறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதினால், தேவன் தம் வாக்குத்தத்தத்தை விட்டுவிட்டார் என்பதைக் குறிக்காது.
Application பயன்பாடு: யூதர்கள் தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியிருப்பதைக் குறித்து நான் வாசிக்கும் அல்லது கேள்விப்படும் எந்தக் காரியமும் தேவன் தன் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார் என்ற விசுவாசத்தை எனக்குள் எழுப்ப வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை நம்பமுடியும். நீர் மாத்திரமே உண்மையாகவே வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறவர். ஆமென்.
No comments:
Post a Comment