Scripture வேதவசனம்: மாற்கு 10: 13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள்.
14. இயேசு அதைக்கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
16. அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
Observation கவனித்தல்: அங்கே இருந்தவர்களின் கண்ணோட்டம் மாறியதைக் கவனியுங்கள்: - ழந்தைகள் இயேசுவின் முன் கொண்டுவர தவிர்க்கப்பட்ட நிலையில் இருந்து மிகவும் முக்கியமானவர்களாக மாறினர்.
- பெற்றோர் தங்களிடம் இருந்த மிகவும் அருமையான சொத்தை கவனிக்காமல் இருந்த நிலையில் இருந்து அதை மிகவும் மதிப்பானதாகக் காணும் நிலைக்கு வந்தனர்.
- தேவையற்ற கவனச் சிதறல்களில் இருந்து இயேசுவைப் பாதுகாக்க முயன்ற அவரின் சீடர்கள் அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைக் கற்றுக் கொண்டனர்.
- இயேசு அவர்களைத் தொடுவதுடன் அணைத்துக் கொள்ளும் நிலைக்கு வந்தார்.
Application பயன்பாடு: சாலையில் எப்படிப் பேரூந்து ஓட்டுவது என்பதைக் குறித்து குழந்தைகள் என்னைப் போல ஞானமும் புரிந்து கொள்ளுதலும் உடையவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை ஒரு கல்விநிலைய பேரூந்து ஓட்டுநராக நான் நன்கு அறிந்திருக்கிறேன். நான் பேரூந்து ஓட்டுவதில் கவனம் செலுத்தும் படி அவர்களை சில வேளைகளில் கவனிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்பதை அவர்களை அறியச் செய்ய வேண்டும். உண்மையைச் சொல்வதானால், அந்தப் பேரூந்து ஓட்டுநராக நான் இருப்பதற்குக் காரணமே அவர்கள் தானே. இதுவே என் கண்ணோட்டமாக இருக்க வேண்டும். நான் பணம் சம்பாதிப்பதற்காக என் வேலை உருவாக்கப்படவில்லை. விலைமதிப்பற்ற உயிர்களுக்கு பாதுகாப்பான பிரயாணத்தௌ வழங்கும்படி அது உண்டாக்கப்ப்ட்டது. பனம் சம்பாதிப்பதற்காக ஒரு பேரூந்தை ஓட்டும்படி தேவன் என்னிடம் சொல்ல வில்லை, மாறாக அவர் குழந்தைகளை நேசிப்பதினாலும் , நானும் அவர்களை நேசிக்க வேண்டும் என்று விருமுவதினாலுமே.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் பார்க்கிற விதமாக நான் அனைத்தையும், குறிப்பாக குழந்தைகளைக் காண உதவும். ஆமென்.
No comments:
Post a Comment